தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Surya Transit: சூரிய பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Surya Transit: சூரிய பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 03, 2023 12:08 PM IST

சூரிய பகவானின் இடமாற்றத்தால் ராஜயோகம் பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

சூரிய பகவான் ஒரு செப்டம்பர் 17ஆம் தேதி அன்று கன்னி ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இதனால் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கப் போகிறது என்று கூறப்படுகிறது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சூரிய பகவானால் உங்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமைகளில் எந்த சிக்கல்களும் ஏற்படாது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.

கடக ராசி

 

சூரிய பகவானால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகப் போகின்றது. இந்த காலகட்டத்தில் வருமானம் உங்களுக்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிலுவையில் இருந்த சிக்கலான விஷயங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். புதிய முயற்சிகள் கைகூடும். அனைத்து விதமான பலன்களும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது.

விருச்சிக ராசி

 

கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான அதிர்ஷ்டங்கள் கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்திற்கு இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மகர ராசி

 

சூரிய பகவானின் பார்வை உங்கள் மீது தீர்க்கமாக விழுகின்ற காரணத்தினால் நல்ல பலன்கள் உங்களை தேடி வர போவதாக கூறப்படுகிறது. பண வரவில் இருந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் மனை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. நிலுவையில் இருந்த சொத்துக்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்