தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Worship: செல்வங்களை அள்ளித் தரும் விரதங்கள் - வாங்கப் பார்க்கலாம்!

Worship: செல்வங்களை அள்ளித் தரும் விரதங்கள் - வாங்கப் பார்க்கலாம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 11, 2023 10:54 AM IST

சகல செல்வங்களையும் அள்ளித்தரும் விரதங்கள் குறித்து இங்கே காண்போம்.

விரதங்கள்
விரதங்கள்

ஏகாதசி விரதங்கள் பெருமாளுக்கு மிகவும் உரிய விரதமாகக் கூறப்படுகிறது. அம்பாளை வழிபாடு செய்யச் சாரதா நவராத்திரி, லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வர விரதம், கௌரி விரதம் உள்ளிட்டவர்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

விநாயகருக்காக தூர்வாஷ்டமி விரதம், ஜோஷ்டா விரதம் ஆகியவை கடைப்பிடிக்கப்படுகிறது. பல்வேறு விதமான விரதங்களின் பலன்களை புரட்டாசி மாதம் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஜோஷ்டா விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி தினத்தன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதம் இந்த ஜோஷ்டா விரதம் ஆகும். எங்கள் பக்கம் வராதே என்று மூதேவியை வேண்டி கடைப்பிடிக்கப்படும் விரதமே இந்த ஜோஷ்டா விரதம் ஆகும்.

தூர்வாஷ்டமி விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி தினத்தில் வரக்கூடிய விரதம் தூர்வாஷ்டமி விரதம் ஆகும். இந்த பிறந்தநாளில் சிவபெருமானையும் அவருடைய மகனான விநாயகர் பெருமானையும் வழிபாடு செய்தால் குடும்பத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் நீங்கும் என நம்பப்படுகிறது.

மகாலட்சுமி விரதம்

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை அஷ்டமி நாளில் முதல் பதினாறு நாட்கள் லட்சுமி தேவியை வழிபாடு செய்யக்கூடிய நாட்களாகும். ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து வழிபட்டால் நமது வறுமைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

கபிலா சஷ்டி விரதம்

புரட்டாசி மாத தேய்பிறை நாளில் வரக்கூடிய சஷ்டி திருநாளில் சூரியனைப் பூஜை செய்து பசு மாட்டிற்கு அலங்காரம் செய்து வழிபாடு செய்யும் விரதமாகும் இந்த கபிலா சஷ்டி விரதமாகும்.

அனந்த விரதம்

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தி நாளன்று கடைப்பிடிக்கக்கூடிய விரதம் இந்த அனந்த விரதம் ஆகும். இந்நாளில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு தூய்மையான ஆடைகளை அணிந்து, ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டுத் தீர்த்த கலசம் வைத்து அனந்த பத்மநாபனை வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

WhatsApp channel

டாபிக்ஸ்