தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Saturn Rajyoga: சனிபகவானால் பணமழையில் நனைய போகும் ராசிக்காரர்கள்

Saturn Rajyoga: சனிபகவானால் பணமழையில் நனைய போகும் ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 31, 2023 11:32 AM IST

சனிபகவான் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனிபகவான்
சனிபகவான்

ஒரு ராசியில் சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் பயணம் செய்வார். ஜூலை 17ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்ர பயணம் மேற்கொண்டார். ஆகஸ்ட் 29ஆம் தேதியிலிருந்து பிற்போக்கு நிலையில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சனிபகவானால் உங்களுக்கு ராஜயோகம் தொடங்கியுள்ளது. உங்கள் ராசியில் கர்ம பாவத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்களை கொடுப்பார். செல்வ வளத்திற்கு எந்த குறையும் இருக்காது. நிலுவையில் இருந்த அனைத்து வேலைகளும் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். திருமண காரியங்கள் கைகூட அனைத்து வேலைகளும் நடக்கும்.

மிதுன ராசி

 

சனிபகவானின் இந்த பயணம் உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை பெற்று தர போகிறது. உங்கள் ராசியில் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். அக்டோபர் மாத இறுதியில் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றிகள் அமையும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

 

சனிபகவானின் சஞ்சாரத்தால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகப் போகின்றது. உங்கள் ராசியில் ஐந்தாம் இடத்தில் சிங்காரம் செய்யும் சனி பகவானால் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டம் மற்றும் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

மகர ராசி

 

சனிபகவானின் பின்னோக்கிய பயணமானது உங்களுக்கு ஜாதகமாக அமைய உள்ளது என கூறப்படுகிறது. சனி பகவான் ஆசி உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். கடின உழைப்பால் மிகப்பெரிய வெற்றியை பெற்று தருவார் சனி பகவான். பண வரவு அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்