தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pitru Puja: ஆன்மாவை நேரில் கண்ட முன்னோர்கள் - பித்ரு பூஜையில் முக்கியத்துவம்!

Pitru Puja: ஆன்மாவை நேரில் கண்ட முன்னோர்கள் - பித்ரு பூஜையில் முக்கியத்துவம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 13, 2023 01:04 PM IST

பித்ரு வழிபாட்டின் முக்கியத்துவம் குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.

பித்ரு பூஜை
பித்ரு பூஜை

அப்படி நம்பிக்கை வைத்திருப்பவர்கள் முன்னோர்களை பித்ருக்கள் என்று அழைத்து உரிய மரியாதை, பூஜை மற்றும் பரிகாரங்கள் உள்ளிட்டவற்றைச் செய்து வருகின்றனர். சங்ககாலத்தில் இருந்து தமிழர்கள் இந்த பித்ரு வழிபாட்டை பின் தொடர்ந்து வருகின்றனர்.

ஆதித்தமிழர்கள் பித்ரு வழிபாட்டை இறைவழிபாட்டிற்கு நிகராக பின்பற்றி வருகின்றனர். மிகவும் துல்லியமாகக் கணக்கிட்டு பித்ரு வழிபாடு செய்து கொண்டுள்ளனர் மூதாதையர்கள். ஒவ்வொரு மாதமும் திதி, நாள், ராசி ஆகியவை ஒன்று சேர்வதைக் கணக்கிட்டு பூஜை மற்றும் விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட கணக்கீடுகள் தான் 100 விழுக்காடு முழுமையான பலனைப் பெற்றுக் கொடுத்துள்ளது. அப்படி உருவாக்கப்பட்டது தான் புரட்டாசி மகாளய பட்ச அமாவாசை தர்ப்பண வழிபாடு. இந்த மகாளய பட்சத்தில் 15 நாட்கள் மறைந்த முன்னோர்கள் வித்ருலோகத்தில் இருந்து பூலோகம் வருவதைக் கணக்கிட்டு தர்ப்பணம் கொடுக்கும் நடைமுறையை முன்னோர்கள் உருவாக்கியுள்ளனர்.

அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பித்ரு பூஜை செய்ய மகாளய பட்சம் சிறப்பான நாள் என அனைத்து புராணங்களிலும் கூறப்பட்டுள்ளன. கிருஷ்ணா அவதாரத்தின் போது பித்து பூஜை செய்ததாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

மகாளய பட்சத்தில் 15 நாட்களும் முன்னோர்களுக்குப் பூஜை செய்து அவர்களின் ஆன்மாவைக் கண்ணில் காணும் பாக்கியத்தை அவர்கள் பெற்றிருந்தார்கள் என கூறப்படுகிறது. தற்போது கலியுகத்தில் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது எனக் கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் முன்னோர்கள் காட்டிய வழியில் மகாளய பட்ச பித்ரு தர்ப்பண வழிபாடுகளில் கடைப்பிடிப்பது என்பது முக்கியமான கடமைகளில் ஒன்றாகும்.

(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. சரியான நிபுணரை அணுகித் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும்.)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்