தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukra Transit: சுக்கிரனின் ராஜ வாழ்க்கை இந்த 3 ராசிகளுக்கு தான்

Sukra Transit: சுக்கிரனின் ராஜ வாழ்க்கை இந்த 3 ராசிகளுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 08, 2023 11:15 AM IST

சுக்கிர பகவானால் ராஜ வாழ்க்கை வாழப் போகும் 3 ராசிகள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ஒருவர் ஜாதகத்தில் சுக்கிர பகவான் நல்ல நிலையில் இருந்தால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. சுப கிரகமான சுக்கிரன் துலாம் மற்றும் ரிஷப ராசிகளின் அதிபதியாக விளங்குகிறார்.

சுக்கிர பகவான் ஒரு ராசியை மாற்றுவதற்கு 23 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். ஒவ்வொரு ராசியை மாற்றும் போதும் அதன் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று சந்திரன் ஆட்சி செய்து வரக்கூடிய கடக ராசிக்குள் நுழைந்துள்ளார்.

சுக்கிர பகவான் கடக ராசிக்கு செல்வதால் சில ராசிகளுக்கு ராஜயோக பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டிற்கு சுக்கிர பகவான் செல்கிறார். இதனால் உங்களது வாழ்க்கையில் ஆடம்பரம் அதிகரிக்கும். புதிதாக வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உள்ளன. இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பண சிக்கல்கள் விலகும். அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அமைய உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசி

உங்கள் ராசியின் பன்னிரண்டாவது வீட்டிற்கு சுக்கிர பகவான் செல்கிறார். திடீர் பணவரவு அதிகரிக்கும். நிலுவையில் இருந்த பணம் உங்களை தேடி வரும். தொட்ட வேலைகள் அனைத்தும் வெற்றி அடையும். சொத்து சிக்கல்கள் விலகும். குழந்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

கடக ராசி

சுக்கிர பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் மூலம் நல்ல பலன்களை பெற போகிறீர்கள். பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். இந்த காலகட்டத்தில் ஆடம்பர வாழ்க்கை அமையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். திருமண வாழ்க்கை இனிமையாக அமையும்.

(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படைகள் உள்ளன. தேவை என்றால் சரியான நிபுணரை அனுப்பி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்