தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Acting Zodiac: இயல்பிலேயே நடிப்பின் உச்சம் செல்லும் பெண் ராசிக்காரர்கள்

Acting Zodiac: இயல்பிலேயே நடிப்பின் உச்சம் செல்லும் பெண் ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 23, 2023 12:31 PM IST

பிறப்பிலேயே நடிப்பின் சிகரமாக விளங்கும் பெண்களின் ராசிகளை இங்கே காண்போம்.

ஜோதிடம்
ஜோதிடம்

திரைப்படம் வெற்றி அடைந்தாலும் சில நடிகர்களின் நடிப்பு திறமை மிகவும் தனித்துவமாக பார்க்கப்படுகிறது. முன்பிருந்த காலத்தை விட தற்போது பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு பெண் தனியாக நடித்து கதையை நகர்த்தும் அளவிற்கு திரைப்படங்கள் வரத் தொடங்கி விட்டன.

தனித்துவமாக சினிமாவில் கதாநாயகிகள் நிற்பதற்கு காரணம் அவர்களின் நடிப்பு திறமை தான். அப்படி நடிப்பில் மகாராணியாக விளங்கக்கூடிய பெண்களின் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சிம்ம ராசி

 

சூரிய பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள் இவர்கள். மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் மட்டுமே. தன்னம்பிக்கை, உச்சத்திறமை உள்ளிட்ட அனைத்து வகை நற்குணங்களையும் கொண்டவர்கள். தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்காக இயல்பிலேயே சிறப்பான நடிப்புத் திறமை கொண்டவர்கள் இவர்கள். தத்ரூபமாக நடிக்கும் திறமை இயல்பிலேயே இவர்களுக்கு உண்டு.

துலாம் ராசி

 

மற்றவர்களை வசீகரம் செய்யும் திறமை கொண்டவர்கள் இவர்கள். சூழ்நிலைக்கு ஏற்றார் போல் தெளிவாக நடிக்க கூடியவர்கள். தன்னை ஒரு கதாபாத்திரமாக நினைத்து மாற்றிக்கொண்டு தத்ரூபமாக நடிக்க கூடியவர்கள். ஒரு இயல்பிலிருந்து விரைவாக மற்றொரு மனநிலைக்கு எளிதாக மாறக் கூடியவர்கள்.

விருச்சிக ராசி

 

தன்னை சுற்றி உள்ளவர்களை எப்போதும் தன்னை பற்றி சிந்திக்க வைக்க கூடியவர்கள் இவர்கள். எளிதில் வசீகரிக்க கூடிய திறமை இவர்களிடம் உண்டு. உளவியல் ரீதியாக பயணம் செய்யக்கூடிய திறமை கொண்டவர்கள் விருச்சிக ராசி காரர்கள். அதற்கு ஏற்றார் போல தன்னை தகவமைத்துக் கொண்டு எளிதாக மக்களிடத்தில் இடம் குடித்து விடுவார்கள்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்