தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Saturn And Sukra: சனியும் சுக்ரனும் சேர்ந்து அதிர்ஷ்டத்தை கொட்டப் போகும் ராசிகள்

Saturn and Sukra: சனியும் சுக்ரனும் சேர்ந்து அதிர்ஷ்டத்தை கொட்டப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 15, 2023 12:47 PM IST

சனியும் சுக்ரனும் அதிர்ஷ்டத்தை தரப்போகும் ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

சனிபகவான்
சனிபகவான்

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக சனி மற்றும் சுக்கிரன் விளங்கி வருகிறார்கள். சனிபகவான் நவம்பர் 4ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார்.

திருமணம், செல்வம், மகிழ்ச்சி, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு சுக்கிர பகவான் காரணியாக விளங்கி வருகிறார். சுக்ர பகவான் சமீபத்தில் தனது இடத்தை மாற்றினார். இந்த இரண்டு கிரகங்களின் மாற்றத்தால் சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சனி மற்றும் சுக்கிர பகவானால் உங்களுக்கு ராஜயோகம் கிடைத்துள்ளது. பணவரவு இந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். திடீரென எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

மகர ராசி

 

இரண்டு கிரகங்களால் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கப் போகின்றது. பண வரவில் இருந்த குறையும் இருக்காது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

மிதுன ராசி

 

தீபாவளிக்கு பிறகு உங்களுக்கு அதிர்ஷ்டம் தொடங்கிவிட்டது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் அதிக வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்