தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tuesday Fast: செவ்வாய் விரதம் - பலன்களை அள்ளிக் கொடுக்கும் முருகப்பெருமான்

Tuesday Fast: செவ்வாய் விரதம் - பலன்களை அள்ளிக் கொடுக்கும் முருகப்பெருமான்

Suriyakumar Jayabalan HT Tamil
May 09, 2023 10:45 AM IST

முருகப்பெருமானுக்குச் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கே காண்போம்.

செவ்வாய்க்கிழமை விரதம்
செவ்வாய்க்கிழமை விரதம்

முருகப்பெருமானுக்குச் செவ்வாய்க்கிழமை மிகவும் விசேஷ நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் எத்தனை பெரிய தோஷமாக இருந்தாலும் அதன் வீரியம் குறைந்து மகிழ்ச்சி கிடைக்கும் என ஆன்மீகம் கூறுகின்றது.

நவகிரகங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் வாழ்க்கை முறை அமைவதாக ஜோதிடம் கூறுகிறது. ஒவ்வொரு கிரகங்களின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையின் நன்மை, தீமைகள் தீர்மானிக்கப்படுவதாக ஜோதிடம் எடுத்துரைக்கின்றது.

ஒருவரின் ஜாதகத்தைப் பொறுத்தவரைச் செவ்வாய் பகவானின் நிலையானது சீராக இருக்க வேண்டும். அவ்வாறு செவ்வாய் பகவானின் நிலையானது சரிவர அமையாதவர்கள் செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட தமிழ் கடவுளான முருகப்பெருமானின் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து சிக்கல்களும் நீங்கும் என ஆன்மீகம் கூறுகின்றது.

முருகப்பெருமானை வேண்டி செவ்வாய்க்கிழமை விரதம் மேற்கொள்ளக் கூடியவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு அருகில் இருக்கும் முருகப்பெருமான் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

கோயிலுக்குச் சென்று வழிபாடு முடித்துவிட்டு வீடு திரும்பியதும் வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி விரதத்தைத் தொடங்க வேண்டும். நாள் முழுவதும் கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் போன்ற முருகப் பெருமானுக்கு உரிய மந்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.

பின்னர் மாலை 6 மணிக்கு மேல் மீண்டும் முருகப் பெருமான் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு மனதார வேண்டுதல் செய்து 9 செவ்வாய்க்கிழமைகள் விரதமிருந்து உளமார முருகப் பெருமானின் வழிபட்டால் செவ்வாய் தோஷம் தீவிரம் குறையும் எனக் கூறப்படுகிறது.

இந்த விரதத்தின் மூலம் பல நன்மைகள் உண்டாகும் என ஆன்மீகம் கூறுகின்றது. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு விரைவில் சொந்தமான வீடு யோகம் உண்டாகும், நிலம் சம்பந்தப்பட்ட சொத்து சிக்கல்கள் தீரும். பய உணர்வுகள் நீங்கி தைரியம் அதிகமாகும், தன்னம்பிக்கை வலுப்பெறும், உடலில் ஆரோக்கியம் அதிகரிக்கும் எனப் பக்தர்கள் நம்புகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

WhatsApp channel

டாபிக்ஸ்