தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lakshmi Yogam: 3 கிரகங்கள் சேர்க்கை.. லட்சுமி நாராயண யோகத்தில் ராஜயோகம் பெறும் ராசிகள்!

Lakshmi Yogam: 3 கிரகங்கள் சேர்க்கை.. லட்சுமி நாராயண யோகத்தில் ராஜயோகம் பெறும் ராசிகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 21, 2023 10:47 AM IST

மூன்று கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் பலன்களைப் பெறப்போகும் ஆறு ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

லட்சுமி நாராயண யோகம்
லட்சுமி நாராயண யோகம்

மேஷ ராசி

கல்வியின் அதிபதியாக விளங்கக்கூடிய புதன் பகவான், சித்திர பகவானோடு சேருகின்ற காரணத்தினால் முன்பு இருப்பதை விட தற்போது இன்பம் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். சிந்திக்கும் திறன் மாணவர்களுக்கு அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது. தொழிலை விரிவுபடுத்த வாய்ப்பு கிடைக்கும்.

மிதுன ராசி

புதன் மற்றும் சுக்கிர சேர்க்கை காரணத்தினால் பல்வேறு சிறப்பான பலன்கள் உங்களுக்குக் கிடைத்த அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். சில புதிய நபர்களைப் பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது. எடுத்த காரியங்கள் நிறைவேறும்.

சிம்ம ராசி

செவ்வாய், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய மூன்று ராசிகளும் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளனர். அதிக அளவில் பண வரவு இருக்கும். உங்கள் நிதி நிலை பலமாக இருக்கும். கடந்த காலத்தில் எடுத்த முயற்சிகள் தற்போது வெற்றி பெறும். நம்பிக்கை அதிகமாகும். சிக்கல்கள் எளிதில் நிவர்த்தி ஆகும். பல அபாயங்களைக் கடந்து வெற்றி காண்பீர்கள்.

துலாம் ராசி

சிம்ம ராசியில் வீற்றிருக்கும் புதன் பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகிறார். வேலை செய்யும் இடத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வணிக தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் கடினமாக உழைக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் உங்களுக்கு அதிகரிக்கும்.

விருச்சிக ராசி

உங்கள் ராசியில் கர்ம ஸ்தானத்தில் லட்சுமி நாராயண யோகம் உண்டாக உள்ளது. இதனால் வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் அதிகமாக இருக்கும். முன்னேற்றத்தில் சற்று சரிவு ஏற்பட்டாலும் உங்களது நற்பெயர் நீடித்து இருக்கும். உங்கள் வாழ்க்கையில் பல திடீர் மாற்றங்கள் ஏற்படலாம். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

கும்ப ராசி

இந்த இடப்பெயர்ச்சி மூலம் பல்வேறு விதமான நன்மைகளைப் பெறப் போகிறீர்கள். உங்களுடைய காதல் வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும். காதல் நிறைவேற வேண்டுமென்றால் ஒன்றும் செய்யத் தேவையில்லை அதுவே அழகாக மாறும். திருமணத் தடை விலகும். மாணவர்களுக்கு நல்ல அறிவு கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெளிப்படையான பாராட்டுக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்