தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Time Zodiac: விலைமதிப்பில்லா நேரத்தை மதிக்கும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Time Zodiac: விலைமதிப்பில்லா நேரத்தை மதிக்கும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 19, 2023 10:30 AM IST

நேரத்தை சரியாக பயன்படுத்தக் கூடிய சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நேரம்
நேரம்

இந்த உலகத்தில் மீண்டும் சம்பாதிக்க முடியாத ஒரே விஷயம் நேரம் தான். அப்படி நேரத்தை சரியாக பயன்படுத்துபவர்கள் வாழ்வின் உச்சத்திற்கு செல்வார்கள் என பல அறிஞர்கள் கூறி நாம் கேட்டதுண்டு.

அந்த வகையில் நேரத்தை சரியாக பயன்படுத்தும் ஐந்து ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

தனித்துவமான ஆற்றல் கொண்ட தைரியத்திற்கு பெயர் போன ராசிக்காரர்கள் இவர்கள். செவ்வாய் கிரகத்தை அதிபதியாகக் கொண்டவர்கள் இவர்கள். தன் வைத்திருக்கக்கூடிய குறிக்கோளுக்கு சரியான நேரத்தை ஒதுக்கி அதற்காக பாடுபடக்கூடியவர்கள் இவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு நேரத்தை மதித்து வேலையை முடித்து விடுவார்கள்.

மகர ராசி

 

பொதுவாகவே இவர்கள் சிறப்பான எண்ணத்தை கொண்டவர்கள். கடின உழைப்பு மற்றும் நேர்மைக்கு பெயர் போனவர்கள். ஒழுக்கத்தில் எப்போதும் குறிக்கோளாக இருப்பார்கள். சனிபகவானால் ஆட்சி செய்யப்படும் இந்த ராசிக்காரர்கள் நேரத்தை கையாள்வது எப்போதும் ஒழுக்கம் தவறாமல் இருப்பார்கள் என கூறப்படுகிறது. நேரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என கூறப்படுகிறது.

கன்னி ராசி

 

நேரத்தை கையாளுவதில் இவர்களுக்கு வல்லவர் இவர்கள் மட்டுமே. அறிவுத்திறன் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட விஷயங்களில் மிகவும் விரைவாக செயல்பட கூடியவர்கள். தங்களின் நேரத்தை சரியாக பயன்படுத்தக் கூடிய ராசிக்காரர்களின் இவர்களும் ஒருவர். முழு அர்ப்பணிப்போடு சரியான நேரத்தில் ஒரு வேலையை முடித்து விடுவார்கள்.

விருச்சிக ராசி

 

குறிக்கோளாக எடுத்துக் கொண்ட விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தக்கூடியவர்களில் இவர்களும் ஒருவர். செய்யும் விஷயங்களுக்கு சரியான நேரத்தை ஒதுக்கி அந்த நேரத்தில் அந்த வேலையை முடித்து விடுவார். செவ்வாய் பகவானால் ஆளப்படும் விருச்சக ராசிக்காரர்கள் குறித்த நேரத்தில் குறித்த வேலையை செய்து முடித்து விடுவார்கள் என கூறப்படுகிறது.

கும்ப ராசி

 

சுதந்திரமாக இருக்கக்கூடிய மன நிலைமையை கொண்ட கும்ப ராசிக்காரர்கள் நேரத்தை கையாள்வதில் வல்லவர்கள் என கூறப்படுகிறது. நேரத்தை மதிக்கும் தன்மை கொண்டவர்கள் இவர்கள். அதிக கவனம் செலுத்தி குறுகிய காலத்தில் பெரிய வேலைகளை செய்து முடிக்கக்கூடிய திறன் கொண்டவர்கள் கும்ப ராசிக்காரர்கள்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்