தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Bad Luck: இந்த 5 ராசிகளுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் கிடையாதாம்

Bad Luck: இந்த 5 ராசிகளுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் கிடையாதாம்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 13, 2023 11:56 AM IST

தொழில் மற்றும் வேலையில் சிக்கலை சந்திக்கும் 5 ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

தொழில்
தொழில்

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பலர் வெற்றியை கண்டாலும், பல்வேறு விதமான சவால்களை சந்தித்து பின்னடைவும் சந்திக்கின்றனர். ஜோதிடத்தின்படி கிரகங்களின் அமைப்பினாலே இப்படி தொழிலில் அதிக சவால்களை சந்திக்கின்றனர் என கூறப்படுகிறது. அப்படி தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மகர ராசி

 

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கடினமான உழைப்பு, உறுதிப்பாடு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர்கள் மகர ராசிக்காரர்கள். வலுவான விருப்பம் சில சமயங்களில் சுய சந்தேகத்தை ஏற்படுத்தும். அதிகப்படியான சிந்தனை சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. அதிகமான தைரியம் தொழிலில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கடக ராசி

 

உணர்வு ரீதியாக தொழிலில் இணைந்திருக்கும் நீங்கள் வித்தியாசமான உள்ளுணர்வு கொண்டவர்கள். பல அம்சங்களில் சாதகமாக உங்களுக்கு அமைப்பு ஏற்பட்டாலும், வேலை மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்கள் சிந்தனை சந்தேகத்தை ஏற்படுத்தும். உங்கள் உணர்ச்சிபூர்வமான சிந்தனைகளை தொழிலில் ஈடுபடுத்தினால் சவாலான சூழ்நிலைகள் உண்டாகிவிடும். யூகத்திற்கு ஏற்றவாறு உங்கள் உணர்வுகளை தொழிலில் ஈடுபடுத்தாதீர்கள்.

மீன ராசி

 

மீன ராசிக்காரர்கள் கற்பனைத் திறன் மற்றும் படைப்பாற்றல் அதிகம் கொண்டவர்கள். புதுமையான துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய இவர்கள் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில சிக்கல்களை சந்திப்பார்கள். கற்பனை திறன் கொண்ட இவர்கள் தொழிலில் அதை ஈடுபடுத்தினால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தங்கள் கற்பனைகளை புகுத்தும் போது நடைமுறையில் அது சிக்கலை ஏற்படுத்துகிறது.

விருச்சிக ராசி

 

தீவிர ஆர்வம் மற்றும் உறுதிப்பாடு சிந்தனைக்கு பெயர் பெற்றவர்கள் நீங்கள். உங்களது அனைத்து தேவைகளையும் ரசித்து செய்யக்கூடிய நீங்கள் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும். ரசனையான மனநிலையோடு தொழிலை அணுகினால் கடினமான சூழல்களை சந்திக்க நேரிடும். அதுவே உங்கள் வளர்ச்சியை தடுக்கும் காரணியாக மாறும்.

கும்ப ராசி

 

பொதுவான வழக்கத்திற்கு மாறான சிந்தனை மற்றும் அணுகுமுறையை கொண்டவர்கள் நீங்கள். எல்லையைத் தாண்டி சிந்திப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே. சில சமயங்களில் அந்த சிந்தனையை உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். வழக்கத்திற்கு மாறான உங்களது சிந்தனை தொழிலில் சிக்கலை ஏற்படுத்தும்.

(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. சரியான நிபுணரை அணுகித் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும்.)

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்