தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2023: பெயர்ச்சி அடைந்தார் குரு பகவான் - விடிய விடியப் பக்தர்களுக்குத் தரிசனம்!

Guru Peyarchi 2023: பெயர்ச்சி அடைந்தார் குரு பகவான் - விடிய விடியப் பக்தர்களுக்குத் தரிசனம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 23, 2023 11:24 AM IST

குருபகவான் நேற்று இரவு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சி அடைந்தார்.

குருபகவான்
குருபகவான்

அந்த வகையில் சுபக் கிரகங்களில் ஒன்றான குரு பகவான் நேற்று இரவு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சி அடைந்தார். இதன் காரணமாகப் பல கோயில்களில் இந்த குருப் பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நவகிரகங்களுக்குத் தோஷங்கள் போக்குவதற்காக தனித்தனி தளங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் ஆலங்குடியில் அமைந்திருக்கும் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் வீற்றிருக்கும் குரு பகவானுக்கு நேற்று பல்வேறு விதமான பூஜைகள் நடத்தப்பட்டன.

ஆண்டிற்கு ஒருமுறை பெயர்ச்சி அடையும் குரு பகவான் இந்த ஆண்டு நேற்று இரவு 11.27 மணிக்குப் பெயர்ச்சி அடைந்தார். இந்நிலையில் உலக நன்மை வேண்டி குரு பகவானுக்கு இரண்டாவது கால குரு பரிகார ஹோமம் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குருபகவானுக்கு 108 கலச அபிஷேகம் நடைபெற்றது. அதற்குப் பிறகு குரு பகவானுக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

குருபகவான்
குருபகவான்

தட்சணாமூர்த்திக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு பிரகாரத்தில் எழுந்தருளி தட்சிணாமூர்த்தி பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தார். நேற்று இரவு பெயர்ச்சி அடைந்த நேரத்தில் குருபகவானுக்குத் தீபாராதனை காட்டப்பட்டது.

குருப் பெயர்ச்சியின் காரணமாக நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குரு பகவானை வழிபாடு செய்தனர். இதே போல விசேஷமான தஞ்சை அடுத்துள்ள திட்டையில் அமைந்துள்ள வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் குருப் பெயர்ச்சி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

குருப் பெயர்ச்சி திருவிழா இரவு நேரத்தில் நடைபெற்றாலும் காலை முதலில் ஏராளமான பக்தர்க்குக் கோயில்களுக்கு வந்துள்ளனர். பின்னர் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து இரவு முழுக்க கூட்டம் கூட்டமாக வந்து விடிய விடிய குரு பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

WhatsApp channel

டாபிக்ஸ்