தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Rahu Transit: குருவும் ராகுவும் இணைந்துவிட்டனர் - ராஜயோகம் தான் போங்க!

Guru Rahu Transit: குருவும் ராகுவும் இணைந்துவிட்டனர் - ராஜயோகம் தான் போங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 04, 2023 09:22 AM IST

குரு சண்டாள யோகத்தால் பலன்கள் பெறப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குரு சண்டாள யோகம்
குரு சண்டாள யோகம்

ஒருவரின் ஜாதகத்தில் குரு வலிமையாக இருக்க வேண்டும் என்று கூறுவதற்குக் காரணம் இதுதான். குரு பகவானும் ராகு பகவானும் ஒரே ராசியில் இருந்தால் குரு சண்டாள யோகம் உண்டாகின்றது.

பொதுவாக குரு பகவான் தான் இருக்கும் இடத்தை விட மற்ற இடத்தை பார்ப்பது தான் மிகவும் சிறப்பு எனக் கூறப்படுகிறது. பல்வேறு தோஷங்களை நீக்கி கோடீஸ்வர யோகத்தைக் கொடுக்கக் கூடியது தான் குரு பகவானின் பார்வை. ராகு குரு பகவானின் பார்த்தாலும் இந்த குரு சண்டாள யோகம் உருவாகும்.

இந்த யோகத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம், பண வரவு, பெரிய மனிதர்களின் நட்பு உள்ளிட்டவை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மேஷ ராசியில் குரு பகவானும் ராகு பகவானும் இணைந்து இருக்கின்றனர்.

இதனால் குருவின் பார்வையானது சிம்மம், துலாம், தனுசு உள்ளிட்ட ராசியின் மீது விழுகின்றது. குருபகவானும், ராகு பகவானும் ஒரு ராசியில் சேர்ந்தால் அந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. 

மேஷ ராசியில் இருவரும் இணைந்தால் பணவரவு அந்த ராசிக்கு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. விருச்சிக ராசியில் இருவரும் இணைந்து இருந்தால் தன்னை தானே நெறிப்படுத்திக் கொண்டு முன்னேற்றம் அடைவார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த சண்டாள யோகத்தால் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சிம்ம ராசி

பணவரவில் இந்த குறையும் இருக்காது. பங்குச்சந்தை முதலீடுகள் மிகப்பெரிய வெற்றிகளைத் தரும் எனக் கூறப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். செல்வ வளம் அதிகரிக்கும். சிக்கல்கள் நீங்கும்.

துலாம் ராசி

எந்த ஒரு செயலாக இருந்தாலும் தீவிரமாகச் செயல்பட்டு அதில் வெற்றி காண்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றிகளைத் தேடித் தரும். பண மழையில் குளிக்க அதிக வாய்ப்பு உள்ளது. தேவையான நேரத்தில் தேவையான உதவிகள் உங்களைத் தேடி வரும். சிக்கல்கள் குறையும்.

தனுசு ராசி 

உங்களது திறமை அதிகரிக்கும். பல்வேறு துறைகளில் வேலை செய்து சாதனைப் புரிவீர்கள். பணக்கஷ்டங்கள் இருக்காது. திடீரென அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்