தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Dream Sastra: பற்கள் உடைவது போல் வரும் கனவு சொல்லும் எச்சரிக்கை..! கனவில் கட்டிடம் உடைந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

Dream Sastra: பற்கள் உடைவது போல் வரும் கனவு சொல்லும் எச்சரிக்கை..! கனவில் கட்டிடம் உடைந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 11, 2023 10:53 AM IST

கனவு சொல்லும் சாஸ்திரங்களில் பற்களை கடிப்பது போல், பற்கள் உடைவது போல், வீடு அல்லது கட்டிடம் உடைவது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பற்கள் உடைவது, கட்டிடம் இடிவது போல் வரும் கனவுகள் சொல்லும் அர்த்தம்
பற்கள் உடைவது, கட்டிடம் இடிவது போல் வரும் கனவுகள் சொல்லும் அர்த்தம்

இதில் பற்களை கடிப்பது போல் வரும் கனவில் பற்கள் உடைவதும், வீடு, கட்டிடங்கள் இடிவது போலும் கனவுகள் வந்த அச்சமூட்டும். இந்த மாதிரயான கனவுகள் வருவதற்கு நம் மனதில் ஏற்படும் பயம், அச்ச உணர்வு தான் காரணம் என்ற சொல்லப்படுகிறது.

பற்களை கடிப்பது, பற்கள் உதிர்ந்து விழுவது போல் வரும் கனவுகள் நமக்கும் வரப்போகும் ஆப்ததை முன்கூட்டிய எச்சரிப்பதாகும் என கூறப்படுகிறது. வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு பற்கள் விழுவது போல் கனவுகள் வந்தால் அவர்கள் உடல் நலத்தினால் ஏற்படும் கவலையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என கூறப்படுகிறது

உங்கள் நண்பரின் பற்கள் விழுவது போல கனவு கண்டால், அந்த நபர் சண்டையிட்டு பிரியபோகிறார் என்று அர்த்தம் என்கிறார்கள். ரத்தம் இல்லாமல் பற்கள் உடைந்து விழுந்தால் அது தோல்வியை உணர்த்துவதாகும் எனவும், பண நெருக்கடி, கடன் பிரச்னையில் இருப்பவர்களுக்கு பற்கள் விழுவது போல கனவு வரும் எனவும் கூறுகிறார்கள்.

தூக்கத்தில் சிலருக்கு அடிக்கடி பற்கள் உடைவது போல கனவு வரும். சிலருக்கு வீடு, கட்டிடம் இடிவது போல கனவு வந்து பயமுறுத்தும். சிலருக்கு மரம் முறிந்து விழுவது போல கனவு வரும். ஏன் இந்த மாதிரியான கனவு வருகிறது என்ற குழப்பம் சிலருக்கு வரும். மனதிற்குள் எழும் பயம் இந்த மாதிரியான கனவுகளுக்கு காரணமாக அமைகிறது என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

மன அழுத்தம், உடல் ஆரோக்கிய பிரச்னை போன்ற காரணங்களாலும் பற்கள் விழுவது போல கனவு வரலாம்.

அதேபோல் சிலருக்கு வீடு அல்லது கட்டிடம் உடைந்து விழுவது போல கனவு வரும். அதற்கான அர்த்தமாக வாழ்க்கையில் ஏதோவொரு குழப்பமும், துன்பமு்ம வரப்போவதை உணர்த்துவதாக கனவு சாஸ்திரம் சொல்கிறது.

புதிதாக வீடு வாங்குவது போல கனவு வந்தால் சுப காரியம் நடைபெறுவதை உணர்த்துகிறது. தோரணங்கள் கட்டிய வீடு கனவில் வந்தால் நல்ல செய்தி தேடி வரப்போகிறது என்று அர்த்தம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்