Horoscope Luck: நீர் உடம்பு.. மனச்சஞ்சலம்… போதாமை; லக்னத்தில் சந்திரன் இருந்தால் இவ்வளவு நடக்குமா? - தப்பிக்க வழி என்ன?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Horoscope Luck: நீர் உடம்பு.. மனச்சஞ்சலம்… போதாமை; லக்னத்தில் சந்திரன் இருந்தால் இவ்வளவு நடக்குமா? - தப்பிக்க வழி என்ன?

Horoscope Luck: நீர் உடம்பு.. மனச்சஞ்சலம்… போதாமை; லக்னத்தில் சந்திரன் இருந்தால் இவ்வளவு நடக்குமா? - தப்பிக்க வழி என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
May 05, 2024 02:40 PM IST

உறவுகளை அதிகமாக நேசிப்பார்கள். வீடோ, வாகனமோ எது வாங்கினாலும், அவர்களையும் மனதில் வைத்துக்கொண்டுதான் வாங்குவார்கள். சந்திரனானவன் வளர்ந்து தேய்வதால், அவ்வப்போது அவர் மனச்சஞ்சலங்களை கொடுப்பார்.

சந்திரபகவான்
சந்திரபகவான்

இது குறித்து அவர் பேசும் போது, “ எந்த லக்னமாக இருந்தாலும், சந்திரன் அங்கு இருக்கிறார் என்றால், ராசியும் லக்னமும் ஒன்று என்று அர்த்தம். லக்னத்தில் சந்திரன் இருந்தால், சுற்றுலா, சிறுதூரபயணம், விதவிதமான ஹோட்டல்களுக்குச் சென்று விதவிதமான உணவுகளை சாப்பிடுவது உள்ளிட்டவை அந்த ஜாதகக்காரர்களுக்கு மிகவும் பிடிக்கும். சந்திரன் 15 நாட்கள் வளரும், 15 நாட்கள் தேயும்.

அதனால், வருமானத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும் அல்லது வருகிற வருமானத்தில் மிச்சம் பிடிக்க முடியாத சூழ்நிலை நிலவும். இவர்களுக்கு அதிமாக தாய் பாசம் இருக்கும்.

உறவுகளை அதிகமாக நேசிப்பார்கள். வீடோ, வாகனமோ எது வாங்கினாலும், அவர்களையும் மனதில் வைத்துக்கொண்டுதான் வாங்குவார்கள். சந்திரனானவன் வளர்ந்து தேய்வதால், அவ்வப்போது அவர் மனச்சஞ்சலங்களை கொடுப்பார். 

குறிப்பாக வாழ்க்கை மீது இருக்கக்கூடிய நம்பிக்கையை குறைப்பார். மனைவியை அதிகமாக நேசிப்பார்கள். சந்திரன் லக்னத்தில் இருந்து அவரை கேதுவோ, ராகுவோ, சனியோ லக்னபாவிகளோ பார்த்தால், முக அழகு கெடும். சளித்தொல்லை, மனத்தொந்தரவு, தூக்கமின்மை, தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது.

அவர்களின் பலம் என்னவென்றால், பயணம் தொடர்பான வேலைகள் இவர்களுக்கு வொர்க் அவுட் ஆகும். உணவு, ஆடை, பால், தயிர், பழரசம் உள்ளிட்ட தொழில்கள் செய்வதில் ஆசை இருக்கும். 

இவர்களுக்கு இட மாறுதல் என்பது கண்டிப்பாக இருந்தே தீர வேண்டும். அப்படியில்லையென்றால், வாழ்வில் தேக்கம் உருவாகி, வளர்ச்சி இல்லாமல் ஆகி விடும். 

இவர்களுடன் போலீஸ், வாத்தியார், ஆடை விற்பனையாளர், செவிலியர் உள்ளிட்டோர் தொடர்பு கொள்வர். இவர்கள் அம்மாவிற்கு விழுந்து, விழுந்து வேலைகள் செய்வார்கள். 

ஆனால் அதற்கான அங்கீகாரம் அவர்களுக்கு சரிவர கிடைக்காது. மாமியார், மருமகள் சண்டையானது அடிக்கடி நடக்கும். பொதுவாக இவர்களுக்கு நீர் உடம்பே இருக்கும். வெளியூர் சென்று தொழில், வேலை பார்த்தால் நல்ல யோகம் கிடைக்கும்.

வெளியே பார்ப்பதற்கு அழகாக காணப்படுவார்கள். ஆனால், உள்ளே ஆயிரம் குழப்பங்கள் இருக்கும். இவர்களை போல யாராலும் கடன் வாங்க முடியாது. அந்தளவிற்கு சளைக்காமல் கடன் வாங்குவார்கள். குழந்தை கருவில் இருக்கும் போதே உயிரிழத்தல், குழந்தை பிறப்பிற்கு நெடும் காலம் பிடித்தல் உள்ளிட்டவை இவர்களுக்கு நடக்கும்.

கல்வியில் போராட்டம் இருக்கும். தந்தையாருக்கு உடல்நிலை பாதிப்பு, அவருடன் கருத்து முரண்பாடு உள்ளிட்டவை இருக்கும். இவர்களெல்லாம் எந்தளவுக்கு அம்மாவின் மனதை நோகடிக்காமல் இருக்கிறார்களோ, அந்தளவுக்கு நன்றாக இருப்பார்கள். அம்மன் வழிபாடு உங்களுக்கு நல்ல பலன் கொடுக்கும். கங்கை நீராடலாம். இவர்களுக்கு கட்டாயம் உடம்பில் காயம் பட்டு தழும்பு காணப்படும்.” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்