தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Budhan Bhagavan: வாழ்வில் பணமழை கொட்ட வேண்டுமா.. புதன் வழிபாட்டை எங்கு எப்போது செய்யலாம் பாருங்க!

Budhan Bhagavan: வாழ்வில் பணமழை கொட்ட வேண்டுமா.. புதன் வழிபாட்டை எங்கு எப்போது செய்யலாம் பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 10, 2023 11:04 AM IST

Mercury: புதன் என்றாலே புத்தியை கொடுக்கும் தெய்வம் என்றே பொருள். புதன் பகவானை சந்திரனின் மைந்தன் என்பர். நவகிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம் தான் திருவெண்காடு திருத்தலம்.

புதன்கிழமை புதன் பகவானைதான் வழிபட வேண்டும்.
புதன்கிழமை புதன் பகவானைதான் வழிபட வேண்டும்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில் வீட்டில் விளக்கு ஏற்றி புதன் பகவானை மனமுருகி வழிபடுவதால் தொழில் சிறப்பாக நடக்கும். அதிக லாபம் கிடைக்கும். நவகிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம் தான் திருவெண்காடு திருத்தலம். மயிலாடு துறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் சீர்காழி உள்ளது. அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்றால் இந்த திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம்.

சந்திரன் மனதை ஆள்பவன். மனதின் எண்ண ஓட்டங்களுக்கு காரணம் சந்திர பகவான். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தளம் திங்களூர்.

புதன் என்றாலே புத்தியை கொடுக்கும் தெய்வம் என்றே பொருள். புதன் பகவானை சந்திரனின் மைந்தன் என்பர். இருவரும் திருவெண்காடு திருத்தலத்தில் தவமிருந்து சிவனின் அருளை பெற்று தங்களது பாவங்களை போக்கி கொண்டார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.

புதன் பகவானுக்கு உகந்த நாள் புதன்கிழமை.

உரிய ராசி கன்னி,மிதுனம். புதன் பகவானுக்கு உரிய திசை வட கிழக்கு. புதன் பகவானுக்கு உகந்த நிறம் பச்சை, வாகனம் குதிரை, பச்சைப்பயிறை கொண்டு செய்யப்படும் நெய்வேத்தியம் மிகவும் சிறப்பு தரும். அவருக்கு உகந்த ஆபரண கல் மரகதம். புதன் பகவானுக்கு வெண் காந்தள் மலர் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் நன்மை பயக்கும்.

புதன் பகவானுக்கு உச்சம் பெற்று ஆட்சி செய்யும் மாதமாக புரட்டாசி உள்ளது. அதேபோல் ஆட்சி பெறும் மாதமாக ஆனி மாதம் விளங்குகிறது.

புதன் பகவானை புதன் ஓரையில் வழிபடுவதும் மிகவும் சிறப்பானதாக இருக்கும் இந்த புதன் ஓரை என்பது புதன் கிழமைகளில் காலை 6 முதல் 7 மதியம் 1முதல் 2 இரவு 8 மணி முதல் 9 மணி நேரத்தில் இருக்கும். இந்த நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றி புதன் பகவானை மனமுருகி வழிபட்டால் மிகவும் சிறப்பு தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்