தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lucky Rasis: பிறவியிலேயே பிரச்சனைகளை சாதுர்யமாக சமாளிக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Lucky Rasis: பிறவியிலேயே பிரச்சனைகளை சாதுர்யமாக சமாளிக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 05, 2024 10:30 AM IST

Astro Tips: உறவில் எந்த பிரச்சனையையும் எளிதில் எதிர்கொள்ளும் திறன் சில ராசிக்கார்களுக்கு உண்டு. இப்படி பிறவியிலேயே பிரச்சனைகளை சாதுர்யமாக சமாளிக்கும் குணம் கொண்ட ராசி பற்றிய தகவல்கள் அறியலாம். மேஷம், ரிஷபம், மகரம் போன்ற ராசிகள் இந்த விஷயத்தில் வல்லமை பெற்றவர்கள்.

பிறவியிலேயே பிரச்சனைகளை சாதுர்யமாக சமாளிக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
பிறவியிலேயே பிரச்சனைகளை சாதுர்யமாக சமாளிக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

நமது நெறுங்கிய உறவுகளில், நட்பு வட்டாரத்தில் சில சமயங்களில் ஒரு சிறிய விஷயத்தால் ஏற்படும் அவமானம் நமக்கு அதிகமாக இருக்கும். இது ஈகோ பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக இருவரிடமும் உள்ள சுயமரியாதை அதை அதிகப்படுத்துகிறது. ஆனால் நெருக்கமான உறவுகளுக்குள் இதுபோன் ஈகோ பிரச்சனைகள் வருவது நல்லது இல்லை. அது நம்மை தனிமைப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் நேரடியாகவும் மறைமுகமாகவும் நம் வளர்ச்சியிலும் ஒரு தடங்களாக அமையலாம். உறவில் எந்த பிரச்சனையையும் எளிதில் எதிர்கொள்ளும் திறன் சில ராசிக்கார்களுக்கு உண்டு. இப்படி பிறவியிலேயே பிரச்சனைகளை சாதுர்யமாக சமாளிக்கும் குணம் கொண்ட ராசி பற்றிய தகவல்கள் அறியலாம். மேஷம், ரிஷபம், மகரம் போன்ற ராசிகள் இந்த விஷயத்தில் வல்லமை பெற்றவர்கள்.

மேஷம்

12 ராசிகளில் மேஷ ராசியினரை பொறுத்த மட்டில் மிகவும் ரகசியமானவர்கள். மேஷ ராசியினர் பிரச்சனைகளில் வெளிப்படையாகப் போராட விரும்ப மாட்டார்கள் . இருப்பினும், மேஷம் தங்கள் உறவுப் பிரச்னைகளை ஒருபோதும் இலகுவாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களின் பிரச்னைகளை எப்போதும் தீர்க்க முயற்சிப்பார்கள். அவர்களது கூட்டாளிகளும் அவ்வாறே செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷபராசிக்கார்களை பொறுத்தவரை உறவுகளுடனும், துணையுடன் தெளிவாகப் பேசவது உணர்வுகளை வெளிப்படுத்துவது போன்ற விஷயங்களில் வல்லமை படைத்தவர்கள். ரிஷப ராசியினரை பொறுத்தமட்டில் தங்கள் உறவில் ஒரு இடைவெளியை உணர்ந்தால், உடனடியாக அதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அதைப் பற்றி பேச முயற்சிக்கிறார்கள். எனவே, உறவு சிக்கல்களைத் தீர்ப்பது ரிஷப ராசியினருக்கு ஒரு போதும் மிகவும் கடினமாக காரியமாக இருக்காது.

மகரம்

இந்த ராசியினரின் உறவுகளில் பல வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக சண்டையை ஆரம்பிப்பவர்கள் இவர்கள்தான். இருப்பினும், அவர்கள் எப்போதும் சச்சரவுகளுக்கான ஒரு தீர்வைக் கண்டு பிடிப்பதில் வல்லவர்களாக இருபபார்கள். நெருங்கிய உறவுகளுக்கு இடையில் அதீத பொறுமையைக் கையாள்வது இவர்களுக்கு மிகவும் சுலபமான ஒன்று. மகர ராசிக்காரர்கள் தங்கள் அவநம்பிக்கைக்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள். ஆனால் இதில் முக்கியமாக விஷயம் மகரராசிக்கார்களை பொறுததமட்டில் ஏன் சண்டையை தொடங்கினார்கள் என தெரிந்து தான் செய்வார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்