Today Rasipalan (05.04.2024): யாருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!
Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 05) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
May 11, 2025 07:00 AMகுரு சுக்கிரன் பலன்கள்: பணமழை கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் கொட்டி தீர்க்கும் ராசிகள்..!
May 11, 2025 04:45 AM'மேஷம் முதல் மீனம் வரை.. மே 11ஆம் தேதி எப்படி இருக்கப்போகிறது..’: 12 ராசிகளுக்கான பலன்கள்!
மேஷம்
வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனை மேம்படும். மனதளவில் தெளிவு ஏற்படும்.
ரிஷபம்
உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். மாறுபட்ட அனுபவங்களால் மனப்பக்குவம் ஏற்படும். உறவினர்களுடன் கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதளவில் ஒருவிதமான திருப்தி ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
மிதுனம்
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். மனதளவில் புதுவிதமான தேடல் பிறக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சேமிப்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும்.
கடகம்
எதிலும் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உடன் இருப்பவர்களிடம் வளைந்து கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை உண்டாகும். வியாபாரம் சார்ந்த அலைச்சல் மேம்படும்.
சிம்மம்
வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்னைகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
கன்னி
உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திடீர் தனவரவுகள் ஏற்படும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுவீர்கள். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும்.
துலாம்
நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்களின் வழியில் புரிதல் ஏற்படும். பண விவகாரங்களில் நாணயத்தோடு செயல்படுவீர்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கைகூடும். புதிய வாய்ப்புகளின் மூலம் சில மாற்றங்கள் உண்டாகும்.
விருச்சிகம்
நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வீடு மாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் அமையும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணம் உண்டாகும்.
தனுசு
தனுசு ராசியினரே இன்று தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு திட்டமிட்ட பணிகள் நிறைவேறும்.
மகரம்
கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசும் வாய்ப்பு உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தோற்றப் பொலிவில் மாற்றம் உண்டாகும். வாக்கு வன்மையால் ஆதாயம் ஏற்படும். பொன், பொருட்சேர்க்கை தொடர்பான சிந்தனை மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும்.
கும்பம்
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். மனதில் தொழில் நிமிர்த்தமான புதிய சிந்தனை ஏற்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும். கால் வலி ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தர்ம காரியத்தில் ஈடுபாடு உண்டாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்