தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chevvai Dosham: திருமணத் தடை, செவ்வாய் தோஷம் அகல செவ்வாய்க்கிழமை இந்தக் கடவுளை வழிபடுங்க

Chevvai Dosham: திருமணத் தடை, செவ்வாய் தோஷம் அகல செவ்வாய்க்கிழமை இந்தக் கடவுளை வழிபடுங்க

Manigandan K T HT Tamil
Aug 29, 2023 12:35 PM IST

நிவேதனமாக பழங்கள், கற்கண்டு, சர்க்கரை என ஏதேனும் ஒன்றை படைக்கலாம்.

மாதிரிப்படம்
மாதிரிப்படம் (Freepik)

முருகன் இந்துக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்த நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதைத் தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாகக் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன.

செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து அவரிடம் மனதார பிரார்த்தனை செய்தால் கேட்டது கிடைக்கும்.

பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய முருகப் பெருமானை எவ்வாறு செவ்வாய்க்கிழமைகளில் வழிபடுவது என பார்ப்போம் வாங்க.

முருகனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் 6 விளக்குகள் ஏற்றுவது சிறப்பு. 6 விளக்குகள் ஏற்ற முடியவில்லை எனில் 1 விளக்காவது ஏற்றலாம்.

நிவேதனமாக பழங்கள், கற்கண்டு, சர்க்கரை என ஏதேனும் ஒன்றை படைக்கலாம். மேலும் முருகப் பெருமானுக்கு பூக்களால் அலங்காரம் செய்து தீப, தூபம் காண்பித்து ஆரத்தியும் எடுக்கலாம்.

சாமந்தி, ரோஜா ஆகியவை முருகனுக்கு உகந்த பூக்கள். சரவணபவ எனும் ஆறு எழுத்து மந்திரத்தை உடையவர் முருகப் பெருமான்.

இவரை வணங்கும்போது ஓம் சரவணபவ என மூன்று முறை உச்சரிக்க வேண்டும். உங்களால் முடிந்தால் கந்த சஷ்டி கவசம் படிப்பது மிகவும் சிறப்பானதாகும். தினமும் கூட காலை நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தை படிக்கலாம்.

முருகப்பெருமான்
முருகப்பெருமான் (Freepik)

இதெல்லாம் நல்ல பலன்களை அளிக்கும். திருமணத் தடை, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளிலும் சஷ்டி தினத்திலும் முருகப் பெருமானை நினைத்து விரதம் இருந்தால் இந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

முருகப் பெருமானை நினைத்து வழிபட்டால் நமக்கு பலன்களை அள்ளி தரும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்