தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vasavi Jayanti: தலை வெடித்துச் சிதறியது - தீயில் இறங்கிய கன்னிகா பரமேஸ்வரி..!

Vasavi Jayanti: தலை வெடித்துச் சிதறியது - தீயில் இறங்கிய கன்னிகா பரமேஸ்வரி..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 30, 2023 12:56 PM IST

ஶ்ரீ வாசவி ஜெயந்தி விரதத்தின் பலன்கள் குறித்து இங்கே காண்போம்.

கன்னிகா பரமேஸ்வரி
கன்னிகா பரமேஸ்வரி

ஆந்திராவின் மேற்கு பகுதி கோதாவரி மாவட்டத்தில் டிபி 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வணிகர் குல தம்பதிகள் புத்திர பாக்கியம் வேண்டி நீண்ட நாள் பராசக்தியை வேண்டி வந்தனர். அவர்களின் பக்திக்கு அருள் ஆசி வழங்கிய அன்னை, தானே மகளாக வந்து பிறந்தார்.

ஆதிபராசக்தி பிறந்த உடனேயே நான்கு கரங்களுடன் தனது பெற்றோருக்குக் காட்சியளித்து பின்னர் தான் ஒரு இறை வடிவம் என உணர்த்திவிட்டு மழலையாக மாறினார். நாம் வேண்டி வரம்பெறும் தெய்வமே நமக்கு மகளாகப் பிறந்தது என எண்ணி அவர்கள் சிறப்பாக வளர்த்தனர்.

அழகிலும், அறிவிலும் சிறந்து விளங்கிய அன்னையின் அழகைக் கண்டு விஷ்ணுவர்தன் எனும் மன்னன் பெண் கேட்டு அனுப்பினார். அதற்கு கன்னிகா தேவி, நான் காலம் முழுவதும் சிவபூஜை செய்யவே விரும்புகிறேன் யாருக்கும் மனைவியாக இருக்க விரும்பவில்லை என மறுத்துவிட்டார்.

அதனைக் கேள்விப்பட்ட மன்னன் கன்னிகா தேவியையும் அந்த ஊரையும் அழிப்பதற்காகப் படை எடுத்து வந்துள்ளார். உடனே அந்த ஊர்காரர்கள் கூடி ஒரு பெண்ணுக்காக ஊரையே ஏன் அழிய விட வேண்டும் என 600க்கும் மேற்பட்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் ஊரை விட்டு வெளியேறினர். இஞ்சி இருந்த மக்கள் மட்டும் கன்னிகாதேவியோடு துணையாக நின்றனர்.

அப்போது தன்னிடம் இருந்த மக்களிடம் தான் யார் என்பது விளக்கிக் கூறினார் கன்னிகா தேவி. மேலும் என்னைத் தெய்வமாக ஏற்ற மக்களுக்கு இந்த கலியுகம் முடியும் வரை துணையாக நிற்பேன் என வாக்கு கொடுத்தார். அவரது முடிவை 102 கோத்திரத்தினர் உடன்பட்டு அவருக்குத் துணையாக நின்றனர்.

பின்னர் இந்த கலியுகம் முடியும் வரை மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைக் கண்ணீரா தேவி அவர்களிடம் விளக்கிக் கூறினார். அதன் பின்னர் ஒரு அக்கினி குண்டம் எழுப்பி அதில் இறங்கி மறைந்தார் கன்னிகா தேவி. அந்த கணத்தில் அன்னையை நோக்கிப் படை எடுத்து வந்த விஷ்ணுவர்தனின் தலை வெடித்துச் சிதறியது.

மன்னன் விஷ்ணுவர்தனின் மகனான ராஜ ராஜ நரேந்திரன் தனது தந்தையின் தவறை உணர்ந்தார். பின்னர் அன்னை வாசவி யின் சகோதரனான விருப்பாச்சனை அணுகி அவரிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் அன்னைக்கூரா கோயில் எழுப்பி வழிபடுவதாகக் கூறி கோயிலை எழுப்பினார்.

அதன் பின்னர் வணிகர் குளத்தைச் சேர்ந்த அனைவரும் அன்னையைக் குலதெய்வமாக வழிபடத் தொடங்கினர். அதன் பின்னர் சித்திரை மாதத்தில் வளர்பிறை தசமி திதியை அன்னையின் ஜெயந்தி தினமாக தற்போது வரை கொண்டாடப்படுகிறது. அதன் பின்னர் கன்னிகா பரமேஸ்வரியின் வழிபாடு நாடு முழுவதும் பரவியது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அன்னை கன்னிகா பரமேஸ்வரிக்கு பல கோயில்கள் உள்ளன.

மக்களின் குறைகளைத் தீர்க்கும் அன்னையை 48 நாட்கள் தியானம் செய்து விரதம் இருந்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என்பதை ஐதீகமாகும். எதிரிகளின் பயத்தைப் போக்கும், விரதம் இருக்கும் பக்தர்களுக்கு எதிரிகள் தொல்லையைப் போக்கும் அன்னையை வேண்டி அருளாசியைப் பெறுவோம்.

WhatsApp channel

டாபிக்ஸ்