தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Surya Bhavan Fast: உச்சம் தரும் சூரிய விரதம் - ஞாயிற்றுக்கிழமை விரதத்தின் பலன்கள்..!

Surya Bhavan Fast: உச்சம் தரும் சூரிய விரதம் - ஞாயிற்றுக்கிழமை விரதத்தின் பலன்கள்..!

Suriyakumar Jayabalan HT Tamil
May 07, 2023 11:02 AM IST

ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கே காண்போம்.

சூரியபகவான்
சூரியபகவான்

பொதுவாகவே சூரிய பகவானுக்குச் சூரிய விரதம் எல்லா காலங்களிலும் மேற்கொள்ளலாம். இந்த ஞாயிற்றுக்கிழமை விரதத்தை எந்த மாதத்திலும் வரும் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றலாம்.

அதிகாலை நேரத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, சூரிய உதயத்தின் போது காலை வேளையில் சூரிய பகவானின் தரிசனம் செய்ய வேண்டும். அவருக்குரிய மந்திரங்களைத் துதித்து வழிபாடு செய்ய வேண்டும்.

அதற்குப் பிறகு கோயில்களுக்குச் சென்று அங்கே இருக்கும் நவகிரக சன்னதியில் சூரிய பகவானுக்குச் செந்தாமரைப் பூவை சமர்ப்பித்து, கோதுமை தானியம் சிறிதளவு வைத்துவிட்டு, நெய் தீபங்கள் ஏற்றி, கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு உணவுப் பொருட்களை நைவேத்தியமாகச் சூரிய பகவானுக்குப் படைக்க வேண்டும்.

பின்னர் அவருக்குரிய துதிகளைப் பாடி வழிபாடு செய்ய வேண்டும். இந்த விரதம் இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் திட உணவுகளை உண்ணாமல் மறுநாள் காலை சூரிய தரிசனம் செய்வதற்கு முன்பு வரை நோன்பு இருக்க வேண்டும்.

மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பு ஒரு செம்பு பாத்திரத்தில் சிறிது நீரை நிவேதனமாக அளித்த பின்பு இந்த விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நீராகாரம் பழச்சாறுகள் போன்றவற்றை அறிந்து இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

சூரிய கிரகணம் மேற்கொண்டால் உடலில் ஆரோக்கியம் அதிகமாகும் எனவும், நோய் சிக்கல்கள் ஏற்படாது எனக் கூறப்படுகிறது. இந்த விரதம் மேற்கொள்ளக்கூடிய பக்தர்களுக்கு, சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும், பெற்றோரின் உடல்நிலை சீராகும், ஆயுட்காலம் நீடிக்கும், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும், தீய சக்திகள் நெருங்காது போன்ற பலன்கள் உண்டாகும் எனக் கூறப்படுகிறது.

பொதுவாக இந்த விரதமாக இருந்தாலும் விரதம் அனுஷ்டிப்பவர்கள் தானங்கள் செய்தால் அதீத பலன்கள் கிடைக்கும் என ஆன்மீகம் கூறுகிறது. அந்த வகையில் உணவு, பொருட்கள் போன்றவற்றை இல்லாதவர்களுக்கு தானம் கொடுக்கலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

WhatsApp channel

டாபிக்ஸ்