தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu Plants Tips: தெற்கு திசையில் இந்த 4 செடிகளை வைத்தால் பண கஷ்டம் வரும்!

Vastu Plants Tips: தெற்கு திசையில் இந்த 4 செடிகளை வைத்தால் பண கஷ்டம் வரும்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 30, 2023 12:09 PM IST

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் இந்த நான்கு செடிகளை தெற்கு திசையில் வைக்கக்கூடாது.

செடிகள்
செடிகள்

அப்படி வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் இருக்கக்கூடிய மரங்கள் மற்றும் செடிகள் கூட முக்கிய பங்கு வகிக்கின்றன. என் ஜாலி இவை அனைத்தும் அனைத்து கிரகங்களோடும் தொடர்பு கொண்டவை. கிரகங்களால் ஏற்படக்கூடிய சில தாக்கத்தை குறைப்பதற்காக வீட்டில் பலர் செடி வளர்க்கின்றனர்.

அப்படி வீட்டில் இருக்கக் கூடிய அந்த பொருட்கள் சரியான இடத்தில் இல்லை என்றால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சரியான திசையில் வைத்தால் மட்டுமே நல்ல பலன்கள் கிடைக்கும்.

அந்த வகையில் செடி மற்றும் மரங்களை சரியான திசையில் வைக்க வேண்டும். தவறான திசையில் வைத்து விட்டால் அது வீட்டின் நிதி நிலையையே மாற்றிவிடும். தெற்கு திசையை முன்னோர்களை திசையாக பார்க்கப்படுகிறது. ஒரு சில செடிகளை இந்த திசையில் வளர்ப்பது தவிர்க்க வேண்டும்.

அப்படி எந்த செடிகளை வீட்டின் தெற்கு திசையில் வளர்க்க கூடாது என்பது குறித்து இங்கே காணலாம்.

வன்னி மரச்செடி

 

இந்த வன்னி மரச்செடியை வீட்டில் தெற்கு திசையில் வளர்த்தால் பல்வேறு சிக்கல்கள் உண்டாகும் என கூறப்படுகிறது. இந்த வன்னி மரமானது சனிபகவானோடு தொடர்பு கொண்டது. வன்னி மரச்செடியை வீட்டில் வளர்த்தால் ஏழரை சனியின் தாக்கத்தை குறைக்கலாம். ஆனால் சரியான இடத்தில் வைக்க வேண்டும். இந்த வன்னி மரச்செடியை கிழக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் வைக்கலாம்.

ரோஸ்மேரி செடி

 

நல்ல மனம் கொண்ட இந்த ரோஸ்மேரி செடியை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லதாகும். நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த செடியை வீட்டில் தெற்கு திசையில் வைத்து வளர்க்கக்கூடாது.

வாழை மரம்

 

விஷ்ணு பகவானோடு தொடர்பு கொண்டது இந்த வாழைமரம். குரு பகவானுக்கும் இந்த வாழை மரத்திற்கும் தொடர்பு உள்ளது. வீட்டிற்குள் வைத்து இந்த வாழை மரத்தை வளர்க்கக்கூடாது. அதேபோல தெற்கு திசையிலும் இதனை வளர்க்கக்கூடாது. அப்படி வைத்தால் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் அருள் கிடைக்காது. வாழை மரத்தை கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைத்து வளர்க்க வேண்டும்.

மணி பிளாண்ட்

 

பணம் சம்பந்தப்பட்ட செடியாக பலர் இந்த செடியை வீட்டில் வளர்க்கின்றனர். அதிர்ஷ்டத்தின் அடையாளமாக இந்த செடி வளர்க்கப்படுகிறது. அப்படி அதிர்ஷ்டத்தை பெற வேண்டுமென்றால் சரியான திசையில் இதனை வளர்க்க வேண்டும். இதனை தெற்கு திசை நோக்கி எக்காரணம் கொண்டும் வைக்க கூடாது. பணம் இல்லப்பு அதிகம் ஏற்படும். இதனை கிழக்கு அல்லது வடக்கு திசையில் வளர்ப்பது சிறந்ததாகும்.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்