தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Panguni Uthiram: 'பழனி பங்குனி உத்திரம்' குவிந்த 500 டன் மலைவாழைப்பழம்

Panguni Uthiram: 'பழனி பங்குனி உத்திரம்' குவிந்த 500 டன் மலைவாழைப்பழம்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 03, 2023 10:41 AM IST

பழனி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு விற்பனைக்காக 500 டன் மலை வாழைப்பழங்கள் மலையடிவாரத்தில் வந்து இறங்கியுள்ளன.

மலைவாழைப்பழம்
மலைவாழைப்பழம்

இந்த பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெறுகிறது. நாளை ( மார்ச் 4) திருத்தேரோட்டம் திருவிழா நடைபெற உள்ளது.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல பக்தர்கள் காவடி எடுத்து கூட்டம் கூட்டமாக இங்கே வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாகப் பழனி மலை அடிவாரத்தில் பக்தர்கள் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து அதனை முருகனுக்கு அபிஷேகம் செய்து தங்கள் ஊருக்கு எடுத்துச் சொல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கு முக்கிய மூலப் பொருளாக மலை வாழைப்பழம் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக சுமார் 25 லட்சம் வாழைப்பழங்கள், அதாவது 500 டன் அளவிற்கு மலை அடிவாரத்தில் விற்பனைக்காக மழை வாழைப்பழம் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆடலூர், பன்றிமலை, குடகு, சிறுமலை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மலை வாழைப்பழங்கள் பழனி அடிவாரத்திற்கு விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளன. வாழைப்பழத்தின் தரத்தைத் பொறுத்து அதன் விலை விற்பனை செய்யப்படும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் தற்போது விலை சற்று கூடுதலாக இருக்கும் எனவும், கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டுத்தீப் பரவிய காரணத்தினால் வாழை மரங்கள் வளர்த்த சேதம் அடைந்துள்ளதால் வரத்துகள் குறைந்துள்ளன. எனவே மலைவாழைப்பழங்களின் விலை சற்று கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தற்போது பழனிக்குப் பக்தர்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளதால் அதிகபட்சம் இரண்டு தினங்களில் அனைத்து பழங்களும் விற்பனை ஆகிவிடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்