தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  காபூல் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு - மதபேதகர் உள்பட 20 பேர் பலி

காபூல் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு - மதபேதகர் உள்பட 20 பேர் பலி

Aug 18, 2022, 03:04 PM IST

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள மசூதி ஒன்றில் தொழுகையின்போது குண்டு வெடித்தது. இதில் 20 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பலியானவர்களில் இஸ்லாமிய மத போதகரான அமீர் முகமது காபூலியும் ஒருவர் என தெரியவந்துள்ளது. மாலை நேர தொழுகையின்போது இந்த தாக்குதலானது நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. காபூல் காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு தாலிபான்களால் நியமிக்கப்பட்ட செய்தி தொடர்பாளர் வடக்கு காபூல் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு ஏற்பட்டத்தை உறுதி செய்துள்ளார். இருப்பினும் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார். அதேபோல் தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித் இந்த குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காபூலில் நடந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 10 பேர் பலியான நிலையில், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு இஸ்லாமிக் ஸ்டேட் என்ற அமைப்பு பொறுப்பேற்று கொண்டது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி பொறுபேற்று ஓராண்டு ஆன பின்பு இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.