தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Video: சியாச்சின் பகுதியில் 38 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவ வீரர் உடல் கண்டெடுப்பு

Video: சியாச்சின் பகுதியில் 38 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவ வீரர் உடல் கண்டெடுப்பு

Aug 16, 2022, 03:22 PM IST

சியாச்சின் பகுதியில் பணிபுரிந்த ராணுவ வீரர் ஒருவர் கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நிலையில், அவரது உடல் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தர் சேகர் என்ற ராணுவ வீரர் பனிச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளார். தற்போதைய உத்தரகண்ட் பகுதியில் உள்ள அல்மோரா பகுதியை சேர்ந்தவரான இவர் 1975ஆம் ஆண்டில் ராணுவத்தில் இணைந்தார். இதையடுத்து 1984ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆபரேஷன் மேக்தூத்க்காக அனுப்பப்பட்ட 20 பேர் கொண்ட குழுவில் ஒருவராக இருந்தார். சியாச்சின் பகுதியில் உள்ள பழைய புதைக்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இவரது உடல் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ள சந்தர் சேகர் உடல் முழு ராணுவ மரியாதை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சியாச்சின் பனிப்பாறை பகுதியில் காஷ்மீரில் உள்ள இந்திய பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஆபரேஷன் மேக்தூத் கொண்டுவரப்பட்டது. உலக அளவில் உயரமான போர்க்களமாக கருதப்படும் இந்தப் சியாச்சின் பகுதியில் இந்திய ராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட முதல் தாக்குதலாகவும் இந்த ஆபரேஷன் மேக்தூத் அமைந்தது. அபாபீல் என்ற பெயரில் பாகிஸ்தான் ஊடுருவ நினைத்த திட்டத்தை இந்த ஆபரேஷன் மூலம் முறியடித்து இந்தியா வெற்றியும் கண்டது. தனது கணவர் உடல் 38 ஆண்டுகளுக்கு பிறகு கண்டறிந்திருப்பதை அறிந்த சந்தர் சேகரின் மனைவி நாட்டுக்காக அவர் உயிர் தியாகம் செய்திருப்பதற்கு பெருமை அடைவதாக தெரிவித்தார்.