தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Chepakkam Stadium : சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் பெயரில் புதிய ஸ்டேன்ட் ?

Chepakkam Stadium : சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் பெயரில் புதிய ஸ்டேன்ட் ?

Divya Sekar HT Tamil

Mar 10, 2023, 11:12 AM IST

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டேன்டிற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டேன்டிற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டேன்டிற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த மைதானங்களில் ஒன்று எம்.ஏ.சிதம்பரம் மைதானம். கடந்த 2011ஆம் ஆண்டு ரூ. 190 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட நிலையில் அண்ணா பெவிலியன் மற்றும் எம்.சி.சி பெவிலியன் மறுசீரமைக்கப்படவில்லை. இதனால் தற்போது அது முழுமையாக இடிக்கப்பட்டு ரூ. 90 கோடி மதிப்பீட்டில் மீண்டும் புதிய பொலிவுடன் கட்டுமான பணிகள் நடைபெற்று உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian Open of Surfing: இந்தியன் ஓபன் சர்ஃபிங்கின் 5வது எடிஷன் மே 31 முதல் தொடங்குகிறது

Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்கில் இரண்டு அருங்காட்சியம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள் குறித்தும், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க போட்டிகள் குறித்தும் அருங்காட்சியம் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. போட்டிகள் இல்லாத நேரங்களில் அருங்காட்சியகத்தை பார்வையிட மக்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தகவல் அளித்துள்ளனர்.

இந்நிலையில் வருகின்ற 17ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு பெவிலியன்களை திறந்து வைக்க உள்ளார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிஎஸ்கே கேப்டன் தோனி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டேன்டிற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டபட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி