தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Kohli 28th Century: 'கொடி பறக்குதா' சதம் அடித்தார் வீராட் கோலி..!

Kohli 28th Century: 'கொடி பறக்குதா' சதம் அடித்தார் வீராட் கோலி..!

Mar 12, 2023, 01:21 PM IST

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நாலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி சதம் அடித்துள்ளார்

ட்ரெண்டிங் செய்திகள்

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடுகிறது. இந்த போட்டிகளில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியான நான்காவது போட்டி அகமதாபாத்தில் மார்ச் ஒன்பதாம் தேதி அன்று தொடங்கியது.

இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 480 ரன்கள் எடுத்தது. இதில் ஆஸ்திரேலிய வீரர்கள் கேமரூன் கிரீன், உஸ்மான் கவாஜா இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர்.

இந்திய அணி சார்பில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பின்னர் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி விக்கெட்டுகள் இழப்புகள் இன்றி இரண்டாவது நாள் முடிவில் 36 ரன்கள் எடுத்தன.

இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்களும், சுப்மன் கில் 18 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர். மூன்றாவது நாளான நேற்று ஆட்டத்தில் ரோகித் சர்மா 35 ரன்களும், சுப்மன் கில் 128 ரன்களும், புஜாரா 42 ரன்களும் எடுத்து மூவரும் ஆட்டம் இழந்தனர்.

இந்திய அணி ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் இருந்த விராட் கோலி 59 ரன்களும், ஜடேஜா 16 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்நிலையில் நான்காவது நாளான இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தொடர்ந்து நிதானமாக விளையாடினார். பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி தனது 28 வது சதத்தை அடித்து அசத்தினார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக விளையாடிய போது விராட் கோலி சதம் அடித்திருந்தார். அதற்குப் பிறகு இந்த ஆட்டத்தில் சதம் அடித்திருக்கிறார். தற்போது விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இதனை கொண்டாடி வருகின்றனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி