தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Virat Kohli: விராட் கோலி அறை விடியோ விவகாரம் - ஒட்டல் நிர்வாகம் மன்னிப்பு

Virat kohli: விராட் கோலி அறை விடியோ விவகாரம் - ஒட்டல் நிர்வாகம் மன்னிப்பு

Oct 31, 2022, 10:45 PM IST

விராட் கோலி அறை விடியோ வெளியான விவகாரத்தில் ஓட்டல் நிர்வாகம் மன்னிப்பு கோரியதுடன், சம்மந்தப்பட்ட நபர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளனர்.விருந்தினர்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு முன்னுரிமை தருவதே முதன்மையாக கருதும் நாங்கள் விடியோ வெளியான விவகாரத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளோம் எனவும் கூறியுள்ளது. (AFP)
விராட் கோலி அறை விடியோ வெளியான விவகாரத்தில் ஓட்டல் நிர்வாகம் மன்னிப்பு கோரியதுடன், சம்மந்தப்பட்ட நபர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளனர்.விருந்தினர்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு முன்னுரிமை தருவதே முதன்மையாக கருதும் நாங்கள் விடியோ வெளியான விவகாரத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளோம் எனவும் கூறியுள்ளது.

விராட் கோலி அறை விடியோ வெளியான விவகாரத்தில் ஓட்டல் நிர்வாகம் மன்னிப்பு கோரியதுடன், சம்மந்தப்பட்ட நபர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளனர்.விருந்தினர்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு முன்னுரிமை தருவதே முதன்மையாக கருதும் நாங்கள் விடியோ வெளியான விவகாரத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளோம் எனவும் கூறியுள்ளது.

பெர்த் நகரில் நடைபெற்ற தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. டி20 உலகக் கோப்பை நடப்பு தொடரில் இந்த முதல் தோல்வியை பெற்றது. இதனால் இந்திய அணியினர், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தோல்வி ஒரு புறம் இருக்க அடுத்த மற்றொரு விரும்பதகாத சம்பவம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

பெர்த் நகரில் இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஒட்டலில் விராட் கோலியின் அறையை அங்கு பணி செய்த ஊழியர் ஒருவர் விடியோவாக எடுத்துள்ளார். அந்த விடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து கோலி, தனது அதிருப்தியை வெளிப்படுத்தி. இதுதொடர்பாக அவர் இன்ஸ்டா பதிவில், "ஒட்டலில் எனது அறையிலேயே எனக்கு தனிப்பட்ட சுதந்திரம் இல்லை என்றால் நான் வேறு எங்கு செல்வது. என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு ரசிகர்கள் மரியாதை தர வேண்டும். அதை ஒரு பொழுதுபோக்கு கருவியாக பயன்படுத்த வேண்டாம்" என்று பொங்கியுள்ளார்.

கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவும், இந்த விஷயத்தில், தங்களது எல்லைகளை கடந்து இவ்வாறு மோசமான நடத்தையை ரசிகர்கள் வெளிப்படுத்தியுள்ளதாக திட்டி தீர்த்துள்ளார்.

விராட் கோலியின் இந்த விடியோ இணையத்தை வட்டமடைத்த சர்ச்சைக்குள்ளான நிலையில், பலரும் விடியோவை வெளியிட்டவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து விடியோ விவகாரம் தொடர்பாக ஒட்டல் நிர்வாகம் கோலியுடன் மன்னிப்பு கோரியதுடன், சம்மந்தப்பட்ட ஊழியரை பணி நீக்கமும் செய்துள்ளது. இதுதொடர்பாக ஒட்டல் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "எங்கள் ஒட்டலுக்கு வரும் விருந்தினர்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு முன்னுரிமை தருவதே முதன்மையாக கருதுகிறோம். இந்த சம்பவத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இந்த விவகாரத்தில் விருந்தினரிடம் நாங்கள் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

இதில் உடனடி நடவடிக்கையையும் எடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட நபர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் நாங்கள் எங்கள் மன்னிப்புகளை தெரிவித்து கொள்கிறோம்"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி 3 போட்டிகள் விளையாடி 2இல் வெற்றி பெற்றுள்ளது. தனது அடுத்த போட்டியில் வங்கதேச அணியை நவம்பர் 2ஆம் தேதி எதிர்கொள்கிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி