தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Southeast Asian Games: தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4வது முறையாக தங்கம் வென்ற அணி!

Southeast Asian Games: தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4வது முறையாக தங்கம் வென்ற அணி!

Manigandan K T HT Tamil

May 16, 2023, 11:44 AM IST

Vietnam Football Team: உலக தரவரிசையில் 33வது இடத்தில் உள்ளது வியட்நாம் மகளிர் கால்பந்து அணி. (@sea_sports_news)
Vietnam Football Team: உலக தரவரிசையில் 33வது இடத்தில் உள்ளது வியட்நாம் மகளிர் கால்பந்து அணி.

Vietnam Football Team: உலக தரவரிசையில் 33வது இடத்தில் உள்ளது வியட்நாம் மகளிர் கால்பந்து அணி.

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியட்நாம் கால்பந்து மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியது.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian Open of Surfing: இந்தியன் ஓபன் சர்ஃபிங்கின் 5வது எடிஷன் மே 31 முதல் தொடங்குகிறது

Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

பைனலில் மியான்மர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது வியட்நாம்.

இதன்மூலம், தொடர்ச்சியாக 4வது முறையாக தங்கம் வென்று வியட்நாம் மகளிர் அணி அசத்தியுள்ளது.

ஃபிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், வியட்நாம் அணி தென்கிழக்கு ஆசிய கேம்ஸில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம், அதன் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.

கம்போடியாவில் புனோம் பென் ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நேற்று நடந்தது.

சுமார் 8000 ரசிகர்கள் இப்போட்டியை பார்க்க திரண்டிருந்தனர். கேப்டன் ஹியூன் நூ 12வது நிமிடத்தில் முதல் கோலைப் பதிவு செய்தார். வியட்நாம் நட்சத்திர வீராங்கனை தி தன்ஹ் நா நுயேன் 76 வது நிமிடத்தில் மற்றொரு கோலைப் பதிவு செய்து அசத்தினார்.

ஆட்டநேரம் முடியும் வரை மியான்மர் ஒரு கோல் கூட பதிவு செய்யவில்லை. இதையடுத்து, வியட்நாம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி விரைவில் வரவுள்ள நிலையில், இந்த வெற்றி எங்களுக்கு மேலும் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது என்று வியட்நாம் அணி கேப்டன் தெரிவித்தார்.

அந்த அணியின் பயிற்சியாலர் மை டச் சுங் கூறுகையில், "ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கும் நிலையில், இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும். ரசிகர்களுக்கும் எங்கள் அணி மீது மேலும் நம்பிக்கை வந்திருக்கும்" என்றார்.

உலக தரவரிசையில் 33வது இடத்தில் உள்ளது வியட்நாம் மகளிர் கால்பந்து அணி.

தென்கிழக்கு ஆசியாவிலிருந்து பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகள் மட்டுமே உலகக் கோப்பை சுற்றுக்குத் தேர்வாகியிருக்கின்றன.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வியட்நாம் அணி குரூப் சுற்று ஆட்டத்தில் ஜூலை 22ம் தேதி அன்று அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி