தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  ஆஸி.யை நாக்அவுட் செய்யுமா ஹர்மன்ப்ரீத் படை - முதல் அரையிறுதி இன்று

ஆஸி.யை நாக்அவுட் செய்யுமா ஹர்மன்ப்ரீத் படை - முதல் அரையிறுதி இன்று

Feb 23, 2023, 12:12 PM IST

T20 Womens World cup 2023: மனநிலை உறுதிபாட்டை குலைக்க செய்து ஆஸ்திரேலியா வீராங்கனைகள் திட்டத்தை வீழ்த்தினால் அவர்களை எளிதில் வென்றுவிடலாம் என்ற முத்தான வார்த்தைகள் உதிர்த்துள்ளார் இந்திய மகளிர் அணியின் விக்கெட் கீப்பரும், பினிஷருமான ரிச்சா கோஷ். (PTI)
T20 Womens World cup 2023: மனநிலை உறுதிபாட்டை குலைக்க செய்து ஆஸ்திரேலியா வீராங்கனைகள் திட்டத்தை வீழ்த்தினால் அவர்களை எளிதில் வென்றுவிடலாம் என்ற முத்தான வார்த்தைகள் உதிர்த்துள்ளார் இந்திய மகளிர் அணியின் விக்கெட் கீப்பரும், பினிஷருமான ரிச்சா கோஷ்.

T20 Womens World cup 2023: மனநிலை உறுதிபாட்டை குலைக்க செய்து ஆஸ்திரேலியா வீராங்கனைகள் திட்டத்தை வீழ்த்தினால் அவர்களை எளிதில் வென்றுவிடலாம் என்ற முத்தான வார்த்தைகள் உதிர்த்துள்ளார் இந்திய மகளிர் அணியின் விக்கெட் கீப்பரும், பினிஷருமான ரிச்சா கோஷ்.

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் மோதிக்கொண்ட பலப்பரிட்சையில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

இதில் முதல் அரையிறுதி போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா இடையே கேப்டவுனில் இன்று மாலை தொடங்குகிறது. நடப்பு ஆஸ்திரேலியா அணி தனது குரூப்பில் விளையாடிய நான்கு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாகவே இந்த முறையும் அசுர பலத்துடன் உள்ளது.

இந்தியா அணி தனது லீக் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி அடைந்து, மூன்று வெற்றிகளுடன் அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.

கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் உலகப் புகழ் பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் மோதின. 86, 174 பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்ற அந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக உலக சாம்பியன் ஆனது.

பரபரப்பான அந்த போட்டியை இரு அணி வீராங்கனைகளும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த முறை இறுதிக்கு முன்னர் அரையிறுதி போட்டியிலேயே மீண்டும் மோதவுள்ளனர். இதுவரை 7 முறை டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி இடம்பெறாத இறுதிப்போட்டியானது இதுவரை நடைபெற்றது இல்லை.

அந்த அளவுக்கு வலிமையான அணியாக திகழும் ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றியிலிருந்து இந்த முறை இந்தியா அணி நாக்அவுட் செய்யுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா அணி வெறும் 7 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது. மெக் லானிங், அலிசா ஹீலோ போன்றோர் இருக்கும் உச்சபட்ச பார்ம் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாகவே அமையக்கூடும். முந்தைய சாதனைகள், பார்ம் போன்றவற்றை மனதை நிலைகுலைய செய்யும் திட்டத்தை ஆஸ்திரேலியா வீராங்கனைகள் முக்கிய ஆயுதமாக பயன்படுத்துவார்கள்.

ஆண்கள் அணியை போல் பெண்கள் அணியும் இந்த திட்டத்தை சரியாக செயல்படுத்தி தோல்வியை நோக்கி செல்லும் ஆட்டத்திலும் வெற்றியை தன் பக்கம் திருப்பியுள்ளனர். எனவே இந்திய வீராங்கனைகளுக்கு மனஉறுதியானது வழக்கத்தை விட கூடுதலாக இருக்க வேண்டும்.

ஹர்மண்ப்ரீத் கெளர் தலைமையிலான இந்திய அணியை பொறுத்தவரை ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி, ரிச்சா கோஷ் பினிசிங் ஆட்டமானது லீக் போட்டிகளில் பெரிதும் கைகொடுத்து வந்தது.அவர்கள் வெளிப்படுத்தி வரும் நிலையான ஆட்டம் இன்றைய போட்டியிலும் தொடரும்பட்சத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பயணத்துக்கு கடிவாளம் போடலாம். இதுவரை எந்தவொரு அணியினராலும் அவுட் செய்யப்படாத கோஷ் பேட்டிங்கின் மூலம் அச்சுறுத்தலை தர வேண்டும்.

பந்து வீச்சை பொறுத்தவரை மித வேகப்பந்து வீச்சாளரான ரேணுகா சிங் அற்புதமான ஸ்விங் பெளலிங் மூலம் ரன்களை கட்டுப்படுவதோடு, விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஸ்டிரைக் பெளலராக உள்ளார்.

இந்த போட்டி குறித்து இந்திய பேட்டரான ரிச்சா கோஷ் கூறியதாவது:

"ஆஸ்திரேலியா டாப் அணியாக மட்டுமில்லாமல் வலிமையான எதிரணியாக உள்ளது. அவர்கள் அட்டாக்கிங் பாணியை கடைப்பிடித்து எங்கள் மீது ஆதிக்கம் செலுத்த பார்ப்பார்கள். அதை எதிர்கொள்ள நாங்களும் அட்டாக்கி பாணியை கையாள முடிவு செய்துள்ளோம்.

எங்களது பலீவினத்தின் மீது அவர்கள் குறி இருக்கும் என்பதால் அதனை சரிப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டோம். மிக முக்கிய மனதை குலைய செய்யும் அவர்களது திட்டத்தை வீழ்த்திவிட்டால் எளிதில் வெற்றி பெற்று விடலாம்" என்றார்.

பிட்ச் எப்படி?

இன்றைய போட்டி நடைபெறும் கேப்டவுன் நியூலண்ட் மைதானத்தில் இதுவரை விளையாடிய ஆடுகளம் இல்லாமல் புதிய ஆடுகளத்தில் போட்டி நடைபெறும் என தெரிகிறது. கோடை வெயில் அங்கு வாட்டி வதைத்தாலும், மாலை பொழுதில் வரும் இதமான தட்பவெட்ப நிலை ஸ்விங், ஸ்பினுக்கு சாதமாக சூழலில் இருக்கும் என கூறப்படுகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி