தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  November Sports Rewind: உலகக் கோப்பையை வென்ற ஆஸி., சச்சின் சாதனையை முறியடித்த கோலி.. மேலும் செய்திகள்

November Sports Rewind: உலகக் கோப்பையை வென்ற ஆஸி., சச்சின் சாதனையை முறியடித்த கோலி.. மேலும் செய்திகள்

Manigandan K T HT Tamil

Nov 30, 2023, 07:10 AM IST

Cricket: நவம்பர் மாதம் முழுவதும் விளையாட்டுத் துறையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்.
Cricket: நவம்பர் மாதம் முழுவதும் விளையாட்டுத் துறையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்.

Cricket: நவம்பர் மாதம் முழுவதும் விளையாட்டுத் துறையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்.

நவ. 1: உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 32வது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா.

ட்ரெண்டிங் செய்திகள்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி புதன்கிழமை அறிவித்தார்.

நவ. 2: இந்தியா-இலங்கை இடையேயான ஆட்டத்தில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.

நவ. 3: ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

நவ. 4: பாகிஸ்தான் அணி டிஎல்எஸ் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

ஆஸ்திரேலியா 33 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தியது.

நவ. 5: வலிமையான அணியாக திகழ்ந்து வரும் தென் ஆப்பிரிக்காவை கொல்கத்தா மைதானத்தில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி கண்டது. மேலும், உலகக் கோப்பையில் தொடர்ந்து 8வது வெற்றியை ருசித்தது இந்தியா.

அதிரடி வீரர் விராட் கோலி, ODI-இல் 49வது சதம் விளாசி சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்தார். நேற்று கோலியின் 35வது பிறந்த நாள் என்பது கூடுதல் ஸ்பெஷல் ஆகும்.

நவ. 6: வங்கதேச அணி, இலங்கையை வீழ்த்தியது. முதல்முறையாக ஏஞ்சலோ மேத்யூஸ் என்ற இலங்கை வீரர், Timed out முறையில் ஆட்டமிழக்க செய்யப்பட்டார்.

நவ. 7: அபுதாபி T10 நவம்பர் 28, 2023 அன்று ஒரு அற்புதமான 7வது சீசனுக்கு திரும்ப உள்ளது, மேலும் நடப்பு சாம்பியன்ஸ் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் சீசனின் முதல் போட்டியில், கடந்த சீசனில் இரண்டாம் இடத்தைப் பிடித்த நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.

நவ. 8: இங்கிலாந்து நெதர்லாந்துக்கு இடையிலான ஆட்டத்தில் இங்கிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நவ. 9: இலங்கை அணியை நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நவ. 10: தென்னாப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நவ. 11: வங்கதேசம், ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையே நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

நவ. 12: இந்தியா-நெதர்லாந்து இடையே நடந்த ஆட்டத்தில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நவ. 13: ‘இலங்கை கிரிக்கெட் அணியின் அழிவுக்கு பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தான் காரணம்’என இலங்கை அணி முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தெரிவித்தார்.

நவ. 15: உலகக் கோப்பை வரலாற்றில் 50 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர், உலகக் கோப்பையின் ஒரே எடிஷனில் அதிக சிக்ஸர்கள் என்ற இரு சாதனைகளை படைத்தார் ரோகித் சர்மா. இச்சாதனையை வெஸ்ட் இண்டீஸின் கெயில் வைத்திருந்தார்.  தற்போது அச்சாதனையை ரோகித் சர்மா முறியடித்தார்.

அரையிறுதியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்தியா.

நவ. 16: தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.

நவ. 17: உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார்.

நவ. 18: ரோஹித் ஷர்மா, விராட் கோலியை காட்டிலும் கேம் சேஞ்சராக ஷ்ரேயாஸ் ஐயர் இருப்பார் என நம்புவதாக கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

நவ. 19: உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. இந்தியா ரன்னர் அப் ஆனது. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

நவ. 20: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நவ. 21: அதீத நம்பிக்கையே இந்தியாவின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்தார்.

உலகக் கோப்பை பைனலில் ‘சூர்யகுமார் ஏன் 7வது வரிசையில் இறக்கப்பட்டார்?’ என கம்பீர் கேள்வி எழுப்பினார்.

நவ. 22: உலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் பிரேசில் அணி, சொந்த மண்ணில் முதல் தோல்வியைச் சந்தித்தது. அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது.

நவ. 23: Julius Baer பெண்கள் ஆன்லைன் ஸ்பீட் செஸ் சாம்பியன்ஷிப் 2023 இன் இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் டி ஹரிகா 11-15 என்ற கணக்கில் சீனாவின் ஜிஎம் ஹவு யிஃபானிடம் தோல்வியடைந்தார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி கண்டது.

நவ. 24: இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நவ. 25: ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை திரும்ப பெறுவதற்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ. 15 கோடி வரை செலுத்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் முன் வந்துள்ளது.

நவ. 26: போபாலில் நடந்த இறுதிப் போட்டியில் சரப்ஜோத் மற்றும் பாலக் ஜோடி 16-14 என்ற கணக்கில் ராஜஸ்தானின் அஞ்சலி மற்றும் அபினவ் சவுத்ரியை வீழ்த்தியது

நவ. 27:  1976க்கு பிறகு இத்தாலி டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. கிரிக்கெட்டில் உலகக் கோப்பையைப் போன்று டென்னிஸில் டேவிஸ் கோப்பை போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டித் தொடர் 1900வது ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

நவ. 28: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்டியா மீண்டும் களமிறங்க உள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் பேஸ்பால் சங்கம் 36வது சீனியர் தேசிய பேஸ்பால் சாம்பியன்ஷிப்பை ஏற்பாடு செய்தது. பெண்கள் பிரிவில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

ஆஸி.,க்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

நவ. 29: கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற டிராவிட்டுடன் 2 ஆண்டுகள் பிசிசிஐ ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.

அடுத்த செய்தி