தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Cwg 2022: குத்துச்சண்டையில் இந்தியா 2 தங்கம் வென்று அசத்தல்

CWG 2022: குத்துச்சண்டையில் இந்தியா 2 தங்கம் வென்று அசத்தல்

Karthikeyan S HT Tamil

Aug 07, 2022, 08:12 PM IST

காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் நீத்து கங்காஸ், ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் அமித் பங்கல் ஆகியோர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் நீத்து கங்காஸ், ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் அமித் பங்கல் ஆகியோர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் நீத்து கங்காஸ், ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் அமித் பங்கல் ஆகியோர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

பெர்மிஹங்காம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் பிரிட்டனின் பெர்மிங்ஹாமில் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் பி.வி.சிந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். இதன் மூலம் பி.வி.சிந்துவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.

குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நீத்து கங்காஸ் இங்கிலாந்து வீராங்கனை டெமி ஜேட் ரெஸ்டனை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் பதக்கத்தை தனதாக்கினார். இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் மேரி கோமிற்கு பிறகு தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை நீத்து கங்காஸ் பெற்றுள்ளார்.

குத்துச்சண்டை ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கல் இங்கிலாந்தின் கியாரன் மெக்டொனால்டுடன் மோதினார். இந்த போட்டியில் அமித் பங்கல் 5-0 என்ற கணக்கில் கியாரனை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

முன்னதாக ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்திய வீரர்கள் இடோஸ் பால் மற்றும் அப்துல்லா அபுபக்கர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் இடோஸ் பால் தங்கப்பதக்கமும், அப்துல்லா அபுபக்கர் வெள்ளியும் வென்று அசத்தினர்.

அடுத்த செய்தி