தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Varun Chakravarthy: பிறந்து இன்னும் பார்க்காத மகனுக்காக அர்பணிக்கிறேன் - ஆட்ட நாயகன் விருதை வென்ற வருண் பேச்சு

Varun Chakravarthy: பிறந்து இன்னும் பார்க்காத மகனுக்காக அர்பணிக்கிறேன் - ஆட்ட நாயகன் விருதை வென்ற வருண் பேச்சு

Apr 27, 2023, 11:08 AM IST

ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் கொல்கத்தா அணியின் ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி. தனக்கு கிடைத்திருக்கும் ஆட்ட நாயகன் விருதை இன்னும் பார்க்காத குழந்தைக்கு அர்பணிப்பதாக தெரிவித்துள்ளார் (AP)
ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் கொல்கத்தா அணியின் ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி. தனக்கு கிடைத்திருக்கும் ஆட்ட நாயகன் விருதை இன்னும் பார்க்காத குழந்தைக்கு அர்பணிப்பதாக தெரிவித்துள்ளார்

ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் கொல்கத்தா அணியின் ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி. தனக்கு கிடைத்திருக்கும் ஆட்ட நாயகன் விருதை இன்னும் பார்க்காத குழந்தைக்கு அர்பணிப்பதாக தெரிவித்துள்ளார்

இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்படும் பெளலராக இருந்து வருகிறார் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி. கொல்கத்தா அணி விளையாடியிருக்கும் 8 போட்டிகளில் பங்கேற்றுள்ள வருண் சக்கரவர்த்தி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian Open of Surfing: இந்தியன் ஓபன் சர்ஃபிங்கின் 5வது எடிஷன் மே 31 முதல் தொடங்குகிறது

Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெளலர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். இதையடுத்து ஆர்சிபி அணிக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை அளித்தார். இதன் காரணமாக ஆட்டநாயகன் விருது பெற்ற வருண் சக்கரவர்த்தி, "வேரியேஷன்களை காட்டிலும் எப்போதும் துல்லியமாக பந்து வீசுவதில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். இந்த ஆட்ட நாயகன் விருதை எனது மனைவிக்கும், அண்மையில் பிறந்த எனது குழந்தைக்கும் அர்பணிக்கிறேன். ஐபிஎல் தொடர் முடிந்த பின்னரே எனக்கு பிறந்த மகனை பார்க்கவுள்ளேன்" என்றார்.

மனைவியுடன் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி

இந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. முதலாவதாக ஏப்ரல் 6ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியிலும் கொல்கத்தா அணி வெற்றி பெறுவதற்கு வருண் சக்கரவர்த்தி பெளலிங் முக்கிய காரணமாக அமைந்தது. 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த வருண் இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து ஆர்சிபி அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் பந்து வீச்சில் கலக்கிய வருண் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்ய கொல்கத்தா அணி 20 ஓவரில் 200 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அதை சேஸ் செய்த ஆர்சிபி அணி, பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் 179 ரன்கள் மட்டுமே  எடுத்து தோல்வியை தழுவியது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

அடுத்த செய்தி