தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Srh Vs Rr:ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி.. சஹல் சுழலில் சிக்கிய Srh முதல் தோல்வி

SRH vs RR:ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி.. சஹல் சுழலில் சிக்கிய SRH முதல் தோல்வி

Manigandan K T HT Tamil

Apr 02, 2023, 07:25 PM IST

IPL 2023: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி தோல்வி அடைந்தது. (AFP)
IPL 2023: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி தோல்வி அடைந்தது.

IPL 2023: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி தோல்வி அடைந்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் 4வது லீக் ஆட்டத்தில் இன்று மோதின.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian Open of Surfing: இந்தியன் ஓபன் சர்ஃபிங்கின் 5வது எடிஷன் மே 31 முதல் தொடங்குகிறது

Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

இரு அணிகளுக்கும் இந்த சீசனில் இதுவே முதல் ஆட்டம்.

20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்களை எடுத்தது. இதையடுத்து 120 பந்துகளில் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது.

தொடக்கம் முதலே தடுமாறிய ஐதராபாத் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி ஆகியோர் ரன்களின்றி டக் அவுட்டாகி வெளியேறினர்.

மயங்க் அகர்வால் மட்டும் நிதானமாக விளையாடிய 27 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரும் ஆட்டமிழந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரி புரூக் 13 ரன்களில் ஆட்டமிழக்க வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னில் நடையைக் கட்டினார். அப்துல் சமத் மட்டும் கடைசி சில ஓவர்களில் அதிரடியாக விளையாடினார்.

இருப்பினும், அந்த அணியால் இலக்கை எட்டிப் பிடிக்க முடியவில்லை. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியைச் சந்தித்தது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் சமத் 32 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சஹல் 4 ஓவர்கள் வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். போல்ட் 2 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஹோல்டர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இவ்வாறாக ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி