தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Srh Vs Rr போட்டியைக் காண வந்த 'வெங்கி மாமா'!

SRH vs RR போட்டியைக் காண வந்த 'வெங்கி மாமா'!

Manigandan K T HT Tamil

Apr 02, 2023, 06:55 PM IST

ஐதராபாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் போட்டியைக் காண ஐதராபாத் மைதானத்திற்கு வந்தார்.
ஐதராபாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் போட்டியைக் காண ஐதராபாத் மைதானத்திற்கு வந்தார்.

ஐதராபாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் போட்டியைக் காண ஐதராபாத் மைதானத்திற்கு வந்தார்.

டாஸ் வென்று ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்ததைத் தொடர்ந்து, முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian Open of Surfing: இந்தியன் ஓபன் சர்ஃபிங்கின் 5வது எடிஷன் மே 31 முதல் தொடங்குகிறது

Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

120 பந்துகளில் 204 ரன்களை எடுத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெறும் என்ற நிலையில், விளையாடி வருகிறது. முதல் ஓவரிலேயே டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 0 ரன்களில் இருந்தது ஐதராபாத்.

பின்னர், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

4வது லீக் ஆட்டமான இந்த ஆட்டம் ஐதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.

இந்த மைதானம் முழுவதும் எங்கு பார்த்தாலும் ஆரஞ்சு ஜெர்ஸி அணிந்த ரசிகர்களைக் காண முடிந்தது. உள்ளூரில் நடக்கும் போட்டி என்பதாலும், 2023 ஐபிஎல் சீசனில் ஐதராபாத் அணியின் முதல் ஆட்டம் என்பதால் அதுவும் ஞாயிற்றுக்கிழமையாக அமைந்ததால் இப்போட்டியைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

ஐதராபாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷும் போட்டியைக் காண ஐதராபாத் மைதானத்திற்கு வந்தார்.

விஐபிக்கள் அமரும் இடத்தில் அமர்ந்து போட்டியைக் கண்டு ரசித்தார் நடிகர் வெங்கடேஷ். சமீபத்தில் இவரது நடிப்பில் ராணா நாயுடு என்ற இணையத் தொடர் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

அவர் மைதானத்திற்கு வந்ததும் ரசிகர்கள் உற்சாகமாக குரலெழுப்பினர். அவர்களை கை அசைத்தபடியே அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தார் நடிகர் வெங்கடேஷ். அவர் ஆரஞ்சு தொப்பியை அணிந்து SRH வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனும் போட்டியைக் கண்டு ரசித்து வருகிறார்.

வெங்கி மாமா என தெலுங்கில் கடந்த 2019ம் ஆண்டு ஒரு படம் வெளியானது. அதில் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்தார் வெங்கடேஷ். அவரது கதாபாத்திரத்தின் பெயர் 'வெங்கி மாமா'.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி