தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Srh Orange Army: 'இப்புடு சூடு'!-ஐதராபாத் மைதானத்தில் ஆர்ப்பரித்த ஆரஞ்சு ஆர்மி!

SRH Orange Army: 'இப்புடு சூடு'!-ஐதராபாத் மைதானத்தில் ஆர்ப்பரித்த ஆரஞ்சு ஆர்மி!

Manigandan K T HT Tamil

Apr 02, 2023, 05:55 PM IST

Sunrises Hyderabad: யெல்லோ ஆர்மி என்றழைக்கப்படும் சிஎஸ்கே ரசிகர்கள் தான் சிஎஸ்கே ஆட்டம் எங்கு நடந்தாலும் அங்கு சென்றால் அரங்கையே அதிரவிட்டு வருவார்கள். (PTI)
Sunrises Hyderabad: யெல்லோ ஆர்மி என்றழைக்கப்படும் சிஎஸ்கே ரசிகர்கள் தான் சிஎஸ்கே ஆட்டம் எங்கு நடந்தாலும் அங்கு சென்றால் அரங்கையே அதிரவிட்டு வருவார்கள்.

Sunrises Hyderabad: யெல்லோ ஆர்மி என்றழைக்கப்படும் சிஎஸ்கே ரசிகர்கள் தான் சிஎஸ்கே ஆட்டம் எங்கு நடந்தாலும் அங்கு சென்றால் அரங்கையே அதிரவிட்டு வருவார்கள்.

டாஸ் வென்று ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்ததைத் தொடர்ந்து, முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian Open of Surfing: இந்தியன் ஓபன் சர்ஃபிங்கின் 5வது எடிஷன் மே 31 முதல் தொடங்குகிறது

Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

120 பந்துகளில் 204 ரன்களை எடுத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெறும் என்ற நிலையில், விளையாடி வருகிறது. முதல் ஓவரிலேயே டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 0 ரன்களில் இருந்தது ஐதராபாத்.

ஐபிஎல் கிரிக்கெட்டின் 4வது லீக் ஆட்டம் ஐதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.

இந்த மைதானத்தில் சுமார் 55000 ரசிகர்கள் வரை போட்டியைக் கண்டு ரசிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த மைதானம் முழுவதும் எங்கு பார்த்தாலும் ஆரஞ்சு ஜெர்ஸி அணிந்த ரசிகர்களைக் காண முடிந்தது. உள்ளூரில் நடக்கும் போட்டி என்பதாலும், 2023 ஐபிஎல் சீசனில் ஐதராபாத் அணியின் முதல் ஆட்டம் என்பதால் அதுவும் ஞாயிற்றுக்கிழமையாக அமைந்ததால் இப்போட்டியைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரசிகர்களும் இருந்தாலும், பெரும்பாலும் ஆரஞ்சு ஆர்மி என்றழைக்கப்படும் ஐதராபாத் அணி ரசிகர்களைத் தான காண முடிந்தது.

மைதானத்தில் எங்கு பார்த்தாலும் ஐதராபாத்துக்கு ஆதரவாக குரலெழுப்பி அரங்கயே அதிரவிட்டனர் ரசிகர்கள்.

ஆரஞ்சு கேப், SRH அணியின் இலச்சினை கொண்ட கொடி ஆகியவற்றுடன் ரசிகர்கள் பட்டாளம் ஐதராபாத் மைதானத்தில் திரண்டுள்ளது.

இப்புடு சூடு என்றால் இப்ப பாரு என அர்த்தம் கொள்ளலாம். இப்ப பாருங்க எங்களோட ஆட்டத்தை என ஐதராபாத் அணி விளையாடி வருகின்றனர்.

யெல்லோ ஆர்மி என்றழைக்கப்படும் சிஎஸ்கே ரசிகர்கள் தான் சிஎஸ்கே ஆட்டம் எங்கு நடந்தாலும் அங்கு சென்றால் அரங்கையே அதிரவிட்டு வருவார்கள். இப்போது அவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கோதாவில் குதித்துள்ளனர் ஆரஞ்சு ஆர்மி.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி