தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ravindra Jadeja: ‘என் விக்கெட்டுக்கா என்ஜாய் பண்றீங்க..’ ஒட்டுமொத்த Csk ரசிகர்களை பிரார்த்திக்க வைத்த ஜடேஜா!

Ravindra Jadeja: ‘என் விக்கெட்டுக்கா என்ஜாய் பண்றீங்க..’ ஒட்டுமொத்த CSK ரசிகர்களை பிரார்த்திக்க வைத்த ஜடேஜா!

May 30, 2023, 05:50 AM IST

IPL 2023 Champion CSK: தனது சொந்த மண்ணில், தனது மாநிலத்தின் பெயர் கொண்ட அணிக்கு எதிராக வெற்றியை தனது அணிக்கு தந்து, ஒவ்வொரு முறையும் தான் வாள் போன்று சுழற்றும் மட்டையின் வேகத்திற்கு வேகம் சேர்த்திருக்கிறார் ஜட்டு (PTI)
IPL 2023 Champion CSK: தனது சொந்த மண்ணில், தனது மாநிலத்தின் பெயர் கொண்ட அணிக்கு எதிராக வெற்றியை தனது அணிக்கு தந்து, ஒவ்வொரு முறையும் தான் வாள் போன்று சுழற்றும் மட்டையின் வேகத்திற்கு வேகம் சேர்த்திருக்கிறார் ஜட்டு

IPL 2023 Champion CSK: தனது சொந்த மண்ணில், தனது மாநிலத்தின் பெயர் கொண்ட அணிக்கு எதிராக வெற்றியை தனது அணிக்கு தந்து, ஒவ்வொரு முறையும் தான் வாள் போன்று சுழற்றும் மட்டையின் வேகத்திற்கு வேகம் சேர்த்திருக்கிறார் ஜட்டு

‘கடைசி பந்தில் ஆட்டத்தை மாற்றும் வல்லமை படைத்தவர் ஜடேஜா’. இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது இதை சொன்னவர் மகேந்திர சிங் தோனி. உண்மையில் ஜடேஜாவின் திறமை மீது தோனிக்கு அலாதி நம்பிக்கை. அதனால் தான் தொடர்ந்து அவரை தன் அருகில் வைத்து அழகு பார்க்கிறார் தோனி.

ட்ரெண்டிங் செய்திகள்

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

இந்திய அணியில் இருந்த போதும் சரி, தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாக இருந்தாலும் சரி, தோனியின் நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்தர் ஜடேஜா தான். பேட்ஸ் மேனாக, பவுலராக தன்னை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டிருப்பவர் ஜடேஜா.

எந்த காலகட்டத்திலும் ஜடேஜாவின் திறமை, கேள்விக்குறியானதில்லை. அந்த அளவிற்கு அவரது திறமை, தொடர்ந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில், பலமுறை ஜடேஜா சந்தித்தது சங்கடங்கள் தான். அவர் விளையாடிக் கொண்டிருக்கும் போது, அவர் ஆட்டமிழக்க வேண்டியவர்கள் தான் அதிகம்.

காரணம், அவர் ஆட்டமிழந்தால் தான் தோனி களத்தில் இறங்கும் நிலையும் இருந்தது. இதனால் அவர் ஒவ்வொரு முறை ஆட்டமிழக்கும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தது சூப்பர் கிங்ஸ் ரசிகர் கூட்டம். ஆனால், அத்தனை சங்கடத்தையும் கடந்த பைனலில், எப்படியாவது ஜடேஜா ஆட வேண்டும் என பிரார்த்திக்க வைத்து, அந்த பிரார்த்தனையையும் நிறைவேற்றியிருக்கிறார் ஜடேஜா.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 பைனிலில், கடைசி பந்தில் பவுண்டரி அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து வந்த ஜடேஜா, தனது சொந்த மண்ணில், தனது மாநிலத்தின் பெயர் கொண்ட அணிக்கு எதிராக வெற்றியை தனது அணிக்கு தந்து, ஒவ்வொரு முறையும் தான் வாள் போன்று சுழற்றும் மட்டையின் வேகத்திற்கு வேகம் சேர்த்திருக்கிறார் ஜட்டு!

எப்போதும் பைனலில் சிக்ஸர்களை விளாசி, பைனல் கிங்காக இருந்த தோனி, முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அப்செட் ஆன போது, ‘நான் இருக்கிறேன்’ என , தன் மீது தோனி வைத்த நம்பிக்கையை பந்துகள் மூலம் பறக்கவிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை உயர்த்த காரணமானார் ஜடேஜா என்று கூறினால், அது மிகையாகாது.

தோனிக்குப் பின் சென்னை அணியை வழிநடத்த முழுத் தகுதியும், திறமையும் ஜடேஜாவிற்கு இருக்கிறது என்பதற்கு இதை விட பெரிய உதாரணம் தேவையில்லை!

டாபிக்ஸ்

அடுத்த செய்தி