தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ipl 3வது அரை சதம் விளாசிய Mi வீரர்!-கடைசி 5 ஓவர்களில் அசத்தல் ஆட்டம்

IPL 3வது அரை சதம் விளாசிய MI வீரர்!-கடைசி 5 ஓவர்களில் அசத்தல் ஆட்டம்

Manigandan K T HT Tamil

Apr 02, 2023, 09:30 PM IST

IPL 2023: ரோகித் 1 ரன்னிலும், கிஷன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். (AP)
IPL 2023: ரோகித் 1 ரன்னிலும், கிஷன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

IPL 2023: ரோகித் 1 ரன்னிலும், கிஷன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் இடையே பெங்களூர் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2023 5வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian Open of Surfing: இந்தியன் ஓபன் சர்ஃபிங்கின் 5வது எடிஷன் மே 31 முதல் தொடங்குகிறது

Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடியது மும்பை இந்தியன்ஸ்.

கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். இருவருமே சொற்ப ரன்களில் நடையைக் கட்டி அதிர்ச்சி கொடுத்தனர்.

ரோகித் 1 ரன்னிலும், கிஷன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த கேமரூன் கிரீன் 5 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த திலக் வர்மா நிதானமாக விளையாடினார். நெஹல் வதேராவும் அவருடன் பார்ட்னர்ஷிப்பில் இருந்தார்.

அணியின் ஸ்கோர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. இதனிடையே, கர்ண் ஷர்மா பந்துவீச்சில் நெஹல் 21 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

பின்னர், வந்த டிம் டேவிட்டும் 4 ரன்களில் நடையைக் கட்டினார்.

தனியொரு வீரராக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரன் வேட்டையில் ஈடுபட்ட திலக் வர்மா அரை சதம் விளாசினார்.

அணியின் ஸ்கோரும் மூன்று இலக்கங்களை கடந்தது.

கர்ண் ஷ்ரமா 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மிட்செல் பிரேஸ்வெல் 1 விக்கெட்டையும் ஆகாஷ் தீப் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

சிராஜ், ரீஸ் டோப்லி ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இவ்வாறாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் திலக் வர்மா 46 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களும் அடங்கும்.

 ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூர் அணி இலக்கை நோக்கி தனது இன்னிங்ஸை விளையாடவுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி