தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Federation Cup 2023 Athletics: ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று அன்னு ராணி அசத்தல்!

Federation Cup 2023 Athletics: ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று அன்னு ராணி அசத்தல்!

Manigandan K T HT Tamil

May 17, 2023, 11:14 AM IST

Annu Rani: ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் பிர்சா முண்டா தடகள மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று நடந்தது.
Annu Rani: ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் பிர்சா முண்டா தடகள மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று நடந்தது.

Annu Rani: ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் பிர்சா முண்டா தடகள மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று நடந்தது.

ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற அன்னு ராணி, ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

அன்னு ராணி, 59.24 மீ தொலைவுக்கு ஈட்டியை எறிந்து, இந்திய தடகள அமைப்பான AFI நிர்ணயித்த 56.46 மீ தரத்தை விட அதிகமான இலக்கை அடைந்து சாதனை படைத்தார்.

தாய்லாந்தின் பேங்காக்கில் ஜூலையில் நடைபெறவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார்.

வீராங்கனைகள் இப்போட்டிக்குத் தகுதி பெற 54.73 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்தால் போதும் என அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் பிர்சா முண்டா தடகள மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று நடந்தது.

மொத்த 27 வீரர்-வீராங்கனைகள் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

அவர்களில் 20 பேர் நிர்ணயிக்கப்பட்ட தகுதி அளவுகோலைக் காட்டிலும் அதிகம் எட்டி சிலிர்ப்பை ஏற்படுத்தினர்.

ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவரான தஜிந்தர்பால் சிங் தூர் 20.42 மீட்டர் தொலைவுக்கு குண்டு எறிந்து தங்கம் வென்றார்.

நிர்ணயிக்கப்பட் அளவுகோலைக் காட்டிலும் கூடுதல் தொலைவுக்கு அவர் குண்டு எறிந்து அசத்தினார்.

கரண்வீர் சிங் 19.05 மீட்டர் தொலைவுக்கும், சாஹிப் சிங் 19.23 மீட்டர் தொலைவுக்கும் குண்டு எறிந்து சாதித்தனர்.

400 மீட்டர் ஓட்டத்தில் பிரியா எச் மோகன் 53.40 விநாடிகளில் இலக்கை எட்டி வெற்றி கண்டார்.

ஆடவர் பிரிவில் 400 மீட்டர் தொலைவை ராஜேஷ் ரமேஷ் (43.75 விநாடிகள்), முகமது அஜ்மல் (45.85 விநாடிகள்) ஆகியோர் அடைந்து முறையே முதல் இரண்டு இடங்களுக்கு வந்தனர்.

46.19 விநாடிகளில் இலக்கை எட்டி மூன்றாவது இடம் பிடித்தபோதிலும் முகமது அனஸ் யாஹியா ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெறவில்லை.

இதேபோல், அமியா குமார் மாலிக் 100 மீட்டர் ஓட்டத்தில் 10.31 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கத்தை வசப்படுத்தினார். ஆனால், இந்தப் பிரிவில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கு 10.19 விநாடிகள் தகுதி அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஸ்ரபானி நந்தா 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 11.44 விநாடிகளில் எட்டியபோதிலும் அவரும் நிர்ணயிக்கப்பட்ட அளவு கோலை அடைய இயலாத காரணத்தால் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது.

ஆடவர் வட்டு எறிதல் போட்டியில் 1. ஹர்பிரீத் சிங் (55.63 மீ); 2. நிர்பய் சிங் (54.39 மீ); 3. சச்சின் சுஹாக் (51.34 மீ) ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

ஆண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் 1. டேவிட் பி (7.75 மீ); 2. முஹம்மது அனீஸ் யாஹியா (7.73 மீ); 3. சாமுவேல் ஆர் (7.59 மீ) ஆகியோரும், ஆடவர் 1500 மீ ஓட்டப் பந்தயத்தில் 1. ஜின்சன் ஜான்சன் (3:44.43); 2. அபிஷேக் சிங் தாக்கூர் (3:45.32); 3. ராகுல் (3:45.72) ஆகியோரும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

சவாலான டெகாத்லான் போட்டியில் 1. உசைத் கான் (6970); 2. மோஹித் (6794); 3. கோகுல் எஸ் (6752) ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி