தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Axar Patel: அக்சர் படேலை பின் வரிசையில் களமிறக்க காரணம் என்ன?-டெல்லி துணை பயிற்சியாளர் பதில்

Axar Patel: அக்சர் படேலை பின் வரிசையில் களமிறக்க காரணம் என்ன?-டெல்லி துணை பயிற்சியாளர் பதில்

Manigandan K T HT Tamil

May 02, 2023, 12:37 PM IST

Delhi Capitals: ‘அதுதான் இந்த ஐபிஎல் போட்டியின் மேஜிக் ஆகும். எந்த அணி வேண்டுமானாலும் எந்த அணியையும் தோற்கடிக்கும்.’ (IPL Twitter)
Delhi Capitals: ‘அதுதான் இந்த ஐபிஎல் போட்டியின் மேஜிக் ஆகும். எந்த அணி வேண்டுமானாலும் எந்த அணியையும் தோற்கடிக்கும்.’

Delhi Capitals: ‘அதுதான் இந்த ஐபிஎல் போட்டியின் மேஜிக் ஆகும். எந்த அணி வேண்டுமானாலும் எந்த அணியையும் தோற்கடிக்கும்.’

ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் மோதுகின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian Open of Surfing: இந்தியன் ஓபன் சர்ஃபிங்கின் 5வது எடிஷன் மே 31 முதல் தொடங்குகிறது

Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

குஜராத் டைட்டன்ஸ் முதலிடத்திலும், டெல்லி அணி கடைசி இடத்திலும் உள்ளன.

குஜராத் அணி இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 6-இல் வெற்றியும், 2இல் தோல்வியும் அடைந்துள்ளது.

டெல்லி அணி அதே 8 போட்டிகளில் விளையாடி 2 இல் மட்டுமே வெற்றியும் 6-இல் தோல்வியும் அடைந்துள்ளது.

இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் பிரவீண் அம்ரே குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக மோசமான தொடக்கத்துடன் தொடங்கிய பல அணிகள் வீறு கொண்டு மீண்டு வந்திருக்கின்றன. அதுதான் இந்த ஐபிஎல் போட்டியின் மேஜிக் ஆகும். எந்த அணி வேண்டுமானாலும் எந்த அணியையும் தோற்கடிக்கும்.

அதனால், நாம் நன்றாக விளையாட வேண்டியது அவசியம். நமது பெஸ்ட்டை கொடுக்க வேண்டும். குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம் சவாலானதாக இருக்கும். ஆனால், ஐபிஎல் கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது.

அடுத்தடுத்த ஆட்டங்களில் ஜெயிக்க வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய குறிக்கோள். நடந்து முடிந்ததை நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் நிகழ்காலத்தில் நடக்க வேண்டியதை பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். மிடில் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்த யோசனையில் ஈடுபட்டிருக்கிறோம். டெத் ஓவர்களிலும் நாங்கள் பேட்டிங்கை மேம்படுத்த வேண்டியது இருக்கிறது.

அதையும் நாங்கள் கருத்தில் கொண்டிருக்கிறோம்.

டெல்லி அணியின் துணை கேப்டன் அக்சர் படேலுக்கு ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை உள்ளது. ஆட்டத்தை ஜெயித்து கொடுக்க அவரது பங்களிப்பு நிச்சயம் தேவை.

அவர் சிக்ஸர்களை இந்த சீசனில் அதிகம் அடித்திருக்கிறார். அவரை முதலில் களமிறக்காமல், கடைசியாக இறக்க சில நேரங்களில் முடிவு செய்வோம்.

ஏனென்றால் அவரை சிறந்த ஃபினிஷர் என்றார் அம்ரே.

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL)எனப்படும் ஆடவர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 21ம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ள 16வது சீசன் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன. சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி