தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Indvsnz 2nd Odi: டாஸ் வென்ற இந்தியா; நியூசிலாந்து பேட்டிங்!மாற்றம் என்ன?

INDvsNZ 2nd ODI: டாஸ் வென்ற இந்தியா; நியூசிலாந்து பேட்டிங்!மாற்றம் என்ன?

Jan 21, 2023, 01:10 PM IST

இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றலாம். (AP)
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றலாம்.

இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றலாம்.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் இந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை 2-0 என்கிற கணக்கில் கைப்பற்றும். 

ஒருவேளை போட்டி நியூசிலாந்துக்கு சாதகமாக போனால், மூன்றாவது ஒரு நாள் போட்டியை கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு நியூசிலாந்து அணி தள்ளப்படும். அதனால் இன்றைய போட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது, டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, ஃபீல்டிங் தேர்வு செய்தார்.  இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெறும் இந்த மைதானம், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானம் ஆகும். அதுமட்டுமின்றி, முதன் முதலாக இங்கு சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதற்கு முன் ஐபிஎல்போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளன. 

முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக பார்க்கப்படும் இந்த மைதானத்தில் , முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சராசரி ரன், 256 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அறிமுகம் இல்லாத புதிய மைதானம் என்பதால், டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்வதே சரியான தேர்வு என, டாஸ் வென்ற ரோஹித் சர்மாவும், டாஸ் தவறவிட்ட நியூசிலாந்து கேப்டனம் லதமும் ஒரே கருத்தை தெரிவித்தனர். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி