தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Aus 3rd Test:சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பும் ஆஸி. கேப்டன் கம்மின்ஸ்

Ind vs Aus 3rd Test:சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பும் ஆஸி. கேப்டன் கம்மின்ஸ்

Feb 20, 2023, 11:47 AM IST

தனிப்பட்ட காரணங்களுக்காக சொந்த ஊரான சிட்னிக்கு பறக்கிறார் ஆஸ்திரிலேயா கேப்டன் பேட் கம்மின்ஸ். அவருக்கு பதிலாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஸ்திலேயா அணியில் இணையவுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குள் கம்மின்ஸ் திரும்பாவிட்டால் அந்த வீரர் களமிறக்கப்படுவார் என தெரிகிறது. (REUTERS)
தனிப்பட்ட காரணங்களுக்காக சொந்த ஊரான சிட்னிக்கு பறக்கிறார் ஆஸ்திரிலேயா கேப்டன் பேட் கம்மின்ஸ். அவருக்கு பதிலாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஸ்திலேயா அணியில் இணையவுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குள் கம்மின்ஸ் திரும்பாவிட்டால் அந்த வீரர் களமிறக்கப்படுவார் என தெரிகிறது.

தனிப்பட்ட காரணங்களுக்காக சொந்த ஊரான சிட்னிக்கு பறக்கிறார் ஆஸ்திரிலேயா கேப்டன் பேட் கம்மின்ஸ். அவருக்கு பதிலாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஸ்திலேயா அணியில் இணையவுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குள் கம்மின்ஸ் திரும்பாவிட்டால் அந்த வீரர் களமிறக்கப்படுவார் என தெரிகிறது.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியில் தற்போது வேகப்பந்து வீச்சுக்கு அச்சாணியாக இருந்து வருகிறார் பேட் கம்மின்ஸ். அந்த அணியின் கேப்டனாக இருந்து வரும் அவர், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கும் முன் சொந்த ஊரான சிட்னிக்கு செல்கிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் செல்ல இருக்கும் நிலையில், மூத்த வேகப்பந்து வீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது கம்மின்ஸ் குடும்பத்தினருக்கு உடல் நலக்குறைவு பாதிப்பு காரணமாக அவர் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு இன்னும் 8 நாள்கள் இடைவெளி உள்ள நிலையில், இந்த போட்டி தொடங்குவதற்கு முன் கம்மின்ஸ் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வேளை அவர் அணிக்கு திரும்பாதபட்சத்தில், தற்போது அணியின் துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது. அத்துடன் காயத்தால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத ஸ்டார்க் அல்லது கம்மின்ஸ்க்கு பதிலாக களமிறக்கப்படும் வீரர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளைாயாடுவார் என தெரிகிறது.

நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் தற்போது இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த வெற்றியின் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளாக இந்தியா அணி தக்கவைத்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேங்கிங்கில் ஆஸ்திரேலியா அணி 136 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 123 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து அணி 124 புள்ளிகள் பெற்றிருந்தாலும் சராசரி அளவில் 5வது இடத்தில்தான் உள்ளது. எனவே உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெறவது உறுதியாகியுள்ள நிலையில், இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் இருஅணிகளும் தங்களது அதற்கு தயார்படுத்திக்கொள்ளும் தொடராகவே அமைந்துள்ளது.

ஏற்கனவே முதல் முறையாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில், நியூசிலாந்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

இதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்தியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதே சமயம் ஒரு நாள் போட்டியில் 5 முறையும், டி20 போட்டியில் ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணியும், தொடர் வெற்றிகளுடன் முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளது.

இந்த இரு அணிகளுக்கு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கு அடுத்தபடியாக மோதும் டெஸ்ட் போட்டி இது அமைந்துள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி