தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Aus 1st Test:ஓபனர்களை காலி செய்த ஷமி - சிராஜ்! மீட்ட ஸ்மித் - லபுஸ்சேன்

Ind vs Aus 1st Test:ஓபனர்களை காலி செய்த ஷமி - சிராஜ்! மீட்ட ஸ்மித் - லபுஸ்சேன்

Feb 09, 2023, 12:09 PM IST

Ind vs Aus 1st Test Lunch:ஆஸ்திரேலியா ஓபனர்களை காலி செய்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அருமையான தொடக்கத்தை அளித்தபோதிலும், பின்னர் பேட் செய்ய வந்த லபுஸ்சேன் - ஸ்மித் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். முதல் நாள் முதல் செஷனில் இரு அணிகளும் சமமான அளவில் ஆதிக்கம் செலுத்தினர்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

Olympic: ‘நாங்கள் நேரத்தை மேம்படுத்த வேண்டும்’: இந்திய ஆண்கள் 4x400 மீட்டர் ரிலே குழு பிளேயர் ராஜீவ் ஆரோக்கியா

FIFA WC 26 qualifiers: இரண்டாவது பட்டியலை வெளியிட்டார் இந்திய தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்

பந்து வீச்சாளர்களுக்கு, குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு சாதகமாக பிட்ச் செயல்படும் என கணிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் அதிர்ச்சி அளித்தனர்.

அடுத்தடுத்த ஓவர்களில் ஆஸ்திரேலியா தொடக்க பேட்ஸ்மேன்கள் உஸ்மான் கவாஜா 1, டேவிட் வார்னர் 1 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினர். இதில் சிராஜ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் கவாஜா அவுட்டானர். அதேபோல் முகமது ஷமி பந்தில் வார்னர் கிளீன் போல்டு ஆனார்.

இதன் பின்னர் பேட் செய்ய வந்த லபுஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து இவர்களை பிரிப்பதற்கு இந்திய கேப்டன் ஸ்பின் அஸ்திரத்தை பயன்படுத்தினார். ஆனால் இந்திய ஸ்பின்னர்கள் சிறப்பாக எதிர்கொண்ட லபுஸ்சேன் - ஸ்மித் ஜோடி பொறுமையாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்கள் இருவரும் இணைந்து 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.

முதல் போட்டியில் உணவு இடைவெளி வரை 32 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் ஆஸ்திரேலியா அணி எடுத்துள்ளது. லபுஸ்சேன் 47, ஸ்மித் 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர். முதல் நாளில் முதல் செஷனில் இருஅணிகளும் சமமான அளவில் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி