தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Icc T20i Batsman Ranking: மூன்றாவது இடத்துக்கு முன்னேறியா சூர்யகுமார் யாதவ்

ICC T20I batsman ranking: மூன்றாவது இடத்துக்கு முன்னேறியா சூர்யகுமார் யாதவ்

Sep 22, 2022, 02:11 PM IST

சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வரும் சூர்யகுமார் யாதவ், ஐசிசி டாப் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாபர் ஆசாமை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அத்துடன் டாப் 10 டி20 பேட்ஸ்மேன்கள் வரிசையில் இருக்கும் ஒரே இந்திய பேட்ஸ்மேனாகவும் உள்ளார். (ANI)
சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வரும் சூர்யகுமார் யாதவ், ஐசிசி டாப் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாபர் ஆசாமை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அத்துடன் டாப் 10 டி20 பேட்ஸ்மேன்கள் வரிசையில் இருக்கும் ஒரே இந்திய பேட்ஸ்மேனாகவும் உள்ளார்.

சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வரும் சூர்யகுமார் யாதவ், ஐசிசி டாப் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாபர் ஆசாமை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அத்துடன் டாப் 10 டி20 பேட்ஸ்மேன்கள் வரிசையில் இருக்கும் ஒரே இந்திய பேட்ஸ்மேனாகவும் உள்ளார்.

சர்வதேச டாப் டி20 பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசியின் தரவரிசையில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இவர் 825 புள்ளிகளை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக தென் ஆப்பரிக்கா அணியின் ஐடன் மார்க்ராம் 792 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

இந்திய பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ், பேட்டிங்கில் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தார். சூழலுக்கு ஏற்பட நிதான ஆட்டம், அதிரடி என விளையாடிய இவர் ரன்களையும் குவித்தார். இதனால் ஒரு புள்ளி முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

அதேசமயம் பாகிஸ்தான் அணியின் ரன் மெஷினாக இருந்து வந்த பாபர் ஆசாம், அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் பார்ம் இழந்த தவித்தார். மொத்தம் 6 போட்டிகள் விளையாடி 68 ரன்கள் மட்டும் எடுத்தார். இதனால் ஒரு புள்ளி பின்தங்கி நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக டேவிட் மாலன், ஆரோன் பின்ச், டேவோன் கான்வே, நிசன்கா, முகமது வாசீம், ஹெண்ட்ரிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளார்கள்.

டாப் 10 இடங்களில் இந்தியாவிலிருந்து சூர்யகுமார் யாதவ் மட்டும் இடம்பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ரோஹித் ஷர்மா 14, விராட் கோலி 16 ஆகிய இடங்களில் உள்ளார்கள்.

அடுத்த செய்தி