தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Virat Kohli: தோனியுடனான தனது நெருக்கம் பற்றி மனம் திறந்து பேசிய விராட் கோலி

Virat Kohli: தோனியுடனான தனது நெருக்கம் பற்றி மனம் திறந்து பேசிய விராட் கோலி

Karthikeyan S HT Tamil

Feb 25, 2023, 12:20 PM IST

Virat Kohli Says About Dhoni: எனது கடினமான காலத்தில் உண்மையுடன் அணுகி உறுதுணையாக இருப்பவர் எம்.எஸ்.தோனி மட்டுமே என்று விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். (ANI)
Virat Kohli Says About Dhoni: எனது கடினமான காலத்தில் உண்மையுடன் அணுகி உறுதுணையாக இருப்பவர் எம்.எஸ்.தோனி மட்டுமே என்று விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.

Virat Kohli Says About Dhoni: எனது கடினமான காலத்தில் உண்மையுடன் அணுகி உறுதுணையாக இருப்பவர் எம்.எஸ்.தோனி மட்டுமே என்று விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரையில் மகேந்திர சிங் தோனியும், விராட் கோலியும் மிகவும் வித்தியாசமானவர்கள். கடினமான சூழலிலும் களத்தில் தோனி அமைதி காப்பார். ஆனால், கோலி சில நேரங்களில் ஆக்ரோஷமாக செயல்படுவார். இருவரின் குறிக்கோள் வெற்றி என்ற இலக்கு தான். அவருடன் கோலி 2008 முதல் 2019 வரை 11 ஆண்டுகள் டீம் இந்தியா டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்துகொண்டுள்ளார். இருவரும் இணைந்து கேப்டன்களாகவும், பேட்ஸ்மேன்களாகவும் பல சரித்திர சாதனைகளை செய்துள்ளனர். ஒரு வேளை, அதுவே இவர்களின் பிணைப்பின் முக்கிய காரணமாக இருக்கலாம். 

ட்ரெண்டிங் செய்திகள்

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

இந்த நிலையில் தோனியுடனான தனது நெருக்கம் பற்றி பேசியிருக்கிறார் விராட். “எனது கடினமான காலத்தில் உண்மையான அக்கறையுடன் என்னை தொடர்பு கொண்ட ஒரே நபர் தோனி தான்.” என்று விராட் கோலி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

ஆர்சிபி அணியின் சீசன் 2 பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் கலந்துகொண்ட விராட் கோலி கூறுகையில், "எனது கிரிக்கெட் கேரியரில் தற்போது வித்தியாசமான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளேன். இந்த காலக்கட்டத்தில் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கிறார் அனுஷ்கா. நான் எதிர்கொண்டுள்ள சூழலை அவர் அறிவார். அனுஷ்கா, என் குடும்பத்தினர், எனது பயிற்சியாளர் தவிர என்னை உண்மையுடன் அணுகி உறுதுணையாக இருப்பவர் எம்.எஸ்.தோனி மட்டுமே.

தோனியை அவ்வளவு சீக்கிரம் தொடர்பு கொண்டுவிட முடியாது. அவரது செல்போனுக்கு அழைத்தால் 99 சதவீதம் அவர் அதை எடுக்க மாட்டார். ஏனென்றால் அவர் போனை பார்ப்பதே அரிது. ஒரு முறை அவர் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதில், நீங்கள் வலிமையானவராக இருக்கும் போதும். வலிமையானவர் என்று பிறரால் அறியப்படும்போதும் உங்களிடம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கக்கூட எல்லோரும் மறந்துவிடுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். தோனியின் அந்த மெசேஜ் என்னை ஆசுவாசபடுத்தியது. வாழ்க்கையில் சில நேரங்களில் யாராக இருந்தாலும் இரண்டு அடி பின்னோக்கிச் சென்று நம்மை நாமே நலம் அறிவது அவசியம். அது சறுக்கல் இல்லை. அதை நான் அன்று உணர்ந்தேன்.

தோனியுடன் டிரஸ்ஸிங் ரூமில் கிரிக்கெட்டில் நாம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது குறித்து இருவரும் உரையாடி இருக்கிறேன். நான் எப்போதும் அவருக்கு வலது கையாக இருந்தேன். இந்திய கிரிக்கெட் அணிக்கு அவர் எப்படி கேப்டனாக இருந்தார் மற்றும் இவ்வளவு காலம் அவர் எப்படி செயல்பட்டார் என்பது குறித்து அவர் மீது எனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு. அதனால்தான் நான் தோனி எனக்குச் சொன்னதை இங்கே எல்லோருடனும் பகிர்கிறேன்." என்று விராட் கோலி கூறியிருக்கிறார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி