தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Ronaldinho: இவர் ரொனால்டோ இல்லை.. ரொனால்டினோ!

HBD Ronaldinho: இவர் ரொனால்டோ இல்லை.. ரொனால்டினோ!

Manigandan K T HT Tamil

Mar 21, 2023, 06:20 AM IST

Former Brazil Football player Ronaldinho: பிரேசில் தேசிய கால்பந்து அணிக்காக இவர் 1999 முதல் 2013 வரை 97 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 33 கோல்களை பதிவு செய்துள்ளார். (@10Ronaldinho)
Former Brazil Football player Ronaldinho: பிரேசில் தேசிய கால்பந்து அணிக்காக இவர் 1999 முதல் 2013 வரை 97 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 33 கோல்களை பதிவு செய்துள்ளார்.

Former Brazil Football player Ronaldinho: பிரேசில் தேசிய கால்பந்து அணிக்காக இவர் 1999 முதல் 2013 வரை 97 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 33 கோல்களை பதிவு செய்துள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ. இவரை பலரும் ரொனால்டோ என நினைத்துக் கொள்வதுண்டு.

ட்ரெண்டிங் செய்திகள்

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

ரொனால்டோ போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவர் இன்றும் விளையாடி வருகிறார்.

ரொனால்டினோ ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது அவருக்கு 42 வயதாகிறது. நாளை 43 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

பிரேசில் தேசிய கால்பந்து அணிக்காக இவர் 1999 முதல் 2013 வரை 97 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 33 கோல்களை பதிவு செய்துள்ளார்.

பிரேஸிலின் Porto Alegre இல் 1980 ஆம் ஆண்டு மார்ச் 21ம் தேதி பிறந்தார் ரொனால்டினோ.

கால்பந்தை மிகவும் நேசிக்கும் தேசமான பிரேஸிலில் பிறந்த இவர் கால்பந்து வீரராக ஆகாமல் போயிருந்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும். போதா குறைக்கு இவரது தந்தை வேறு உள்ளூர் கால்பந்து கிளப் அணியில் விளையாடியவர்.

இவரது சகோதரரும் கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என முயற்சிகளை எடுத்தார். ஆனால், காயம் ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து கால்பந்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

அப்போது ரொனால்டினோவுக்கு வயது 8. இளம் வயதினர் விளையாடும் கிளப் அணியில் விளையாடியபோதே கலக்கியவர். ஒரு முறை உள்ளூர் ஆட்டம் ஒன்றில் தனது அணிக்காக 23 கோல்களை பதிவு செய்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

1997 யு-19 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெனால்டி கிக் முறையில் 2 கோல்களைப் பதிவு செய்ததன் மூலம், ரைஸிங் ஸ்டார் என்ற பெயரை எடுத்தார்.

பிரேசில் யு-17 அணிக்காக 13 ஆட்டங்களில் விளையாடி 3 கோல்களையும், பிரேசில் யு-20 அணிக்காக 17 ஆட்டங்களில் விளையாடி 8 கோல்களையும் பதிவு செய்துள்ளார்.

பிரேசில் அணி ஜெர்ஸியுடன் ரொனால்டினோ

பிரேஸில் தேசிய அணிக்காக 97 ஆட்டங்களில் விளையாடி 33 கோல்களை பதிவு செய்துள்ளார் ரொனால்டினோ.

2008 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் பிரேசில் அணியை கேப்டனாக வழிநடத்தி வெண்கலப் பதக்கம் வென்று திரும்பினார் ரொனால்டினோ.

கிரெமியோ, பாரிஸ் செயின்ட்-ஜெர்மெயின், பார்சிலோனா, ஏசி மிலன், ஃபிளமெங்கோ, அட்லெடிகோ மினைரோ, கியூரெடரோ, ஃப்ளுமினென்ஸ் ஆகிய கிளப் அணிகளுக்காக விளையாடி மொத்தம் 205 கோல்களை அடித்துள்ளார்.

2018ஆம் ஆண்டில் அவர் ஓய்வை அறிவித்தார். இவரது ஜெர்ஸி எண் 10.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி