தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Upw Vs Gg: பிளே ஆஃப் சுற்றில் யு.பி. வாரியர்ஸ்.. ஹேரிஸ் அதிரடியால் த்ரில் வெற்றி

UPW vs GG: பிளே ஆஃப் சுற்றில் யு.பி. வாரியர்ஸ்.. ஹேரிஸ் அதிரடியால் த்ரில் வெற்றி

Manigandan K T HT Tamil

Mar 20, 2023, 06:55 PM IST

WPL 2023: யு.பி.வாரியர்ஸ் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
WPL 2023: யு.பி.வாரியர்ஸ் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

WPL 2023: யு.பி.வாரியர்ஸ் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

குஜராத் ஜெயன்ட்ஸ்-யு.பி.வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை குவித்தது.

பின்னர், விளையாடிய யு.பி. 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிளே-ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெற்றது யு.பி.

குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனை ஹேமலதா அரை சதம் விளாசினார். கார்ட்னரும் 60 ரன்கள் விளாசி அசத்தினார்.

30 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தினால் ஹேமலதா. அவர் 33 பந்துகளில் 57 ரன்கள் விளாசி இருந்தபோது ஆட்டமிழந்தார்.

மகளிர் ப்ரீமியர் லீக்கில் இதுதான் அவரது முதல் அரை சதம் ஆகும். கார்ட்னர் 39 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

யு.பி.வாரியர்ஸ் அணி 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது.

யு.பி. அணியின் தொடக்க வீராங்கனை தேவிகா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் அலிசா 12 ரன்களிலும், கிரன் நாவ்கிரே 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

டஹிலா மெக்ராத் அரை சதம் விளாசினார். பின்னர், வந்த கிரேஸ் ஹாரிஸ் வெளுத்து வாங்கினார்.

ஆனால், 41 பந்துகளில் 72 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்லீன் தியோலிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் சிம்ரன்

ஷேக்கும் ரன் அவுட்டானார். 2 பந்துகளில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது.

அஞ்சலி சர்வானி வந்தார். சோபி எக்லெஸ்டின் போல் அடித்து இலக்கை எட்டினார். இவ்வாறாக யு.பி.வாரியர்ஸ் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக, முதலில் விளையாடி குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் வீராங்கனைகள் தொடக்கத்தில் சற்று தடுமாறினர்.

தொடக்க வீராங்கனை டங்லி 23 ரன்களிலும், வோல்வார்ட் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த ஹர்லீன் தியோலும் 4 ரன்களில் நடையைக் கட்டினார். அப்போதுதான் ஆபத்பாந்தவனாக களத்தில் இறங்கினார் தயாளன் ஹேமலதா.

சென்னையைச் சேர்ந்தவரான இவருக்கு, இந்த முறை குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் கிடைத்தது.

இதுவரையிலான ஆட்டங்களில் பெரிதாக சோபிக்காத ஹேமலதா இன்றைய ஆட்டத்தில் பொளுந்து கட்டினார்.

மொத்தம் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளை அவர் விளாசினார். மறுமுனையில் கார்ட்னரும் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி