தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ipl Cheerleaders: ஐபிஎல் உற்சாக அழகிகளுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

IPL Cheerleaders: ஐபிஎல் உற்சாக அழகிகளுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Karthikeyan S HT Tamil

Apr 07, 2023, 12:35 PM IST

ஐபிஎல் கிரிக்கெட்டில் நடனமாடி உற்சாகப்படுத்தும் இளம் பெண்களை ‘சியர் லீடர்ஸ்’ என்று அழைக்கிறார்கள். யார் இந்த சியர் லீடர்கள்? இவர்களின் சம்பளம், தகுதி என்னவென்று இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். (PTI)
ஐபிஎல் கிரிக்கெட்டில் நடனமாடி உற்சாகப்படுத்தும் இளம் பெண்களை ‘சியர் லீடர்ஸ்’ என்று அழைக்கிறார்கள். யார் இந்த சியர் லீடர்கள்? இவர்களின் சம்பளம், தகுதி என்னவென்று இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நடனமாடி உற்சாகப்படுத்தும் இளம் பெண்களை ‘சியர் லீடர்ஸ்’ என்று அழைக்கிறார்கள். யார் இந்த சியர் லீடர்கள்? இவர்களின் சம்பளம், தகுதி என்னவென்று இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா வண்ணமயமாக நடக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட்டில் பந்து எல்லைக் கோட்டைத் தாண்டி பறக்கும்போதெல்லாம் "சியர் லீடர்ஸ்" என்கின்ற உற்சாக அழகிகளின் துள்ளல் நடனம் மைதானத்தை அதிரவைக்கத் தவறுவதில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டின் அடையாளமாகவே தற்போது சியர் லீடர்ஸ்கள் மாறிவிட்டார்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian Open of Surfing: இந்தியன் ஓபன் சர்ஃபிங்கின் 5வது எடிஷன் மே 31 முதல் தொடங்குகிறது

Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

சியர் லீடர்ஸ் குட்டை பாவாடை அணிந்து, அணிகள் பவுண்டரிகள், சிக்ஸர்கள், விக்கெட்டுகள் எடுக்கும்போது நலினமான, அதிரடியான டான்ஸ் மூமெண்ட்டுகளுடன் ஜொலிக்கிறார்கள். இவர்கள் ஆடுவதற்கென மைதானங்களில் பிரத்யேகமான மேடை அமைக்கப்பட்டிருக்கும். இவர்களின் ஆடைகள் பெரும்பாலும் அந்தந்த அணிகளின் ஜெர்ஸிகளை ஒட்டியே வடிவமைக்கப்பட்டிருக்கும். சியர் லீடர்ஸ் அழகிய நடை மற்றும் நடனத்தால், கிரிக்கெட் மைதானத்தில் அமர்ந்திருக்கும் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன்வசப்படுத்துகிறார்கள். வீரர்கள் சிக்ஸர்கள், பவுண்டரிகள் மற்றும் விக்கெட்டுகளுடன் மக்களை மகிழ்விக்கிறார்கள்.

உற்சாக அழகிகள் இல்லாத இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க இன்று பலரும் விரும்புவதில்லை. அந்த அளவுக்கு அவர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டுக்குள் தடம்பதித்துவிட்டார்கள். ஒவ்வொரு அணிக்கும் ஐபிஎல் சியர் லீடர்ஸ் ஒரு போட்டிக்கு ரூ.14,000 முதல் ரூ.17,000 வரை ஊதியம் பெறுகிறார்கள். அவர்களின் செயல்திறன் சிறப்பாக இருந்தால் மற்றும் அவர்களின் அணி போட்டியில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு போனஸ் தொகை வழங்கப்படும் . சம்பளம் தவிர, அவர்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் போது ஆடம்பர தங்குமிடம், தினசரி உணவு மற்றும் பிற வசதிகள் போன்ற சலுகைகளையும் பெறுகிறார்கள்.

சியர் லீடர்ஸ் அழகிகள் நடனம், மாடலிங் ஆகியவற்றில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் ஒரு குழுவின் ஒரு பகுதியாக இருந்து ஒரு குழுவாக ஆடிஷன் செய்தால் அது ஒரு பிளஸ் என்று கருதப்படுகிறது. ஐபிஎல் சியர் லீடர்ஸ் தேர்வு செயல்முறை கடுமையானது மற்றும் நேர்காணல்கள் மற்றும் சில தேர்வுகளை கொண்டுள்ளது. அவர்கள் ஐபிஎல் சியர் லீடர்ஸூக்கான பங்கிற்கு ஆடிஷன் செய்யும்போது ஒரு செயல்திறனுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டியில் உள்ள பெரும்பாலான சியர் லீடர்ஸ்கள் பெரும்பாலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். குறைவான ஆடை, எப்போதும் சிரிப்பு, உற்சாகமான நடன அசைவுகள், இவைதான் சியர் லீடர்ஸ் செய்ய வேண்டிய முக்கியப் பணிகள். இவர்களின் ஆட்டத்தை டிவியில் பார்க்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் ரசிப்பார்கள். ஐபிஎல் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் சியர் லீடர்ஸ் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி