தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Cwg 2022: ஸ்டேடியத்தில் கீழே விழுந்த ஸ்பிக்கர் - மல்யுத்த போட்டி நிறுத்தம்

CWG 2022: ஸ்டேடியத்தில் கீழே விழுந்த ஸ்பிக்கர் - மல்யுத்த போட்டி நிறுத்தம்

Aug 05, 2022, 10:02 PM IST

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மல்யுத்த ஆட்டத்தின் முதல் நாளில் ஸ்டேடியத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சிறிது நேரம் போட்டி தடைபட்டது. மொத்தம் 5 போட்டிகள் மட்டுமே நடைபெற்று முடிந்துள்ளது.

பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளின் அமைப்பாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமான நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. மல்யுத்த போட்டிகள் நடைபெற்ற செவென்டரி ஸ்டேடியத்தில் முதல் நாளின்போது யாரும் எதிர்பாராத விதமாக மேற்கூரை மீது பொருத்தப்பட்டிருந்த ஸ்பீக்கர்கள் கீழே விழுந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

Olympic: ‘நாங்கள் நேரத்தை மேம்படுத்த வேண்டும்’: இந்திய ஆண்கள் 4x400 மீட்டர் ரிலே குழு பிளேயர் ராஜீவ் ஆரோக்கியா

இன்றைய ஆட்டத்தின் முதல் செஷன் தொடங்கி சில நிமிடங்களுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் 5 போட்டிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆட்டங்கள் நிறுத்தப்பட்டதுடன், பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இன்று நடைபெற்ற ஐந்து ஆட்டங்களில் 86 கிலோ பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் தீபக் புனியா வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்துக்கு பின்னர் இப்படியொரு எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. இதைத்தொடர்ந்து இரண்டு மணி நேரம் தாமதத்துக்கு பிறகு போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

அடுத்த செய்தி