தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Cwg 2022: நடை ஓட்டத்தில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று பிரியங்கா கோஸ்வாமி சாதனை

CWG 2022: நடை ஓட்டத்தில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று பிரியங்கா கோஸ்வாமி சாதனை

Aug 07, 2022, 01:35 AM IST

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளிப்பதக்கத்தை நடை ஓட்டம் ஆட்டத்தில் பெற்று தந்துள்ளார் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளிப்பதக்கத்தை நடை ஓட்டம் ஆட்டத்தில் பெற்று தந்துள்ளார் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளிப்பதக்கத்தை நடை ஓட்டம் ஆட்டத்தில் பெற்று தந்துள்ளார் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி.

பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான நடை ஓட்டம் போட்டியில் 10, 000 மீட்டர் ஆட்டத்தில் இந்தியாவின் பிரியங்கா 49 நிமிடம் 38 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் தடகள விளையாட்டில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கத்தை அவர் பெற்று தந்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

Novak Djokovic: 'தலையில் பாட்டில் விழுந்ததால் வலி'-இத்தாலியன் ஓபனில் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

வசில் அடித்த ஓடத் தொடங்கியதில் இருந்து 4000 மீட்டர் வரை முதல் ஆளாக நடை ஓட்டம் செய்து வந்த பிரியங்கா கோஸ்வாமி, பின் ஆஸ்திரேலியாவின் ஜெமிமா மொன்டாக் மற்றும் கென்யாவின் எமிலி வமுசி என்கி ஆகியோரிடம் பின் தங்கினார். 8 கிலோ மீட்டர் முடிவுக்கு பின்னர் பிரியங்கா மீண்டும் 3வது இடத்துக்கு முன்னேறினார். கடைசி 2 கிலோ மீட்டர் மட்டும் இருந்த நிலையில், கென்ய வீராங்கனை எமிலியை சேஸ் செய்து முன்னேறினார்.

இந்த போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான பாவ்னா ஜத், 8வது இடத்தை பிடித்தார். இதையடுத்து, "பெண்களுக்கான நடை ஓட்டத்தில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றது மகிழ்ச்சி. எனவே வரலாற்றின் ஒரு பகுதியை உருவாக்கியதில் மிகவும் பெருமை கொள்கிறேன்" என்று போட்டிக்கு பின்னர் கோஸ்வாமி கூறியுள்ளார்.

இந்திய பெண்கள் நடை ஓட்டத்தில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருந்தாலும், அவருக்கு முன்னதாக 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற 2000 மீட்டர் ஆண்களுக்கான நடை ஓட்டத்தில் இந்தியாவின் ஹர்மின்தர் சிங் வெண்கலம் வென்றார்.

தடகளம் விளையாட்டுக்கு முன் பிரியங்கா கோஸ்வாமி பள்ளிகளில் ஜிம்னாஸ்டிகில் நீண்ட காலமாக இருந்து வந்தார். இதன்பின்னர் தடகள விளையாட்டில் ஆர்வம் காட்டிய அவர் பின் நடை ஓட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரியங்கா கோஸ்வாமிக்கு விளையாட்டுக்கு அடுத்தபடியாக பேஷன் மீது அதீத ஆர்வம் உள்ளது.

அடுத்த செய்தி